PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.
அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.
மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.
Post Name: Trainee Lashing Supervisor [With Joining Bonus]
Work type: Permanent
சிங்கப்பூரில் பெரிய துறைமுக நிறுவனமான PSA, இளைஞர்களை Lashing Supervisor வேலைக்குத் தயார்படுத்தி, அவர்களுக்குத் துறைமுகத் துறையில் ஒரு நல்ல வேலையை அமைத்துக் கொடுக்கிறது. 8,000 டாலர் வரை சேர்க்கைப் போனஸ் (Joining Bonus) கிடைக்கும்! (சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் உண்டு).
பயற்சி காலம்: 1 வருடம்
கப்பல்களில் உள்ள கொள்கலன்களை (containers) Lashing உபகரணங்கள் மூலம் பாதுகாப்பாகக் கட்டுவது உங்கள் முக்கியப் பணியாகும்.
கப்பல்களைத் துறைமுகத்தில் நிறுத்துதல் (berthing) மற்றும் புறப்படச் செய்தல் (unberthing) போன்ற பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.
Coning மற்றும் Deconing போன்ற துறைமுக wharf செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், நீர் நிரப்புதல் (water bunkering) நடவடிக்கைகளிலும் உதவுவீர்கள்.
ஒரு வருடப் பயிற்சியாளர் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, Lashing பணிகளை மேற்பார்வையிட்டு, Lashing நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படும்.
சுழற்சி முறையில் ஷிஃப்டுகளில் மற்றும் வெளிப்புறப் பணிகளில் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
உயரமான இடங்களில் வேலை செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025