TamilSaaga

Breaking News: சிங்கப்பூர் Employment Pass-க்கு புதிய ரூல்! என்ன? எதற்கு?

சிங்கப்பூர் E-பாஸ்க்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த மாற்றத்தின்படி E-பாஸ் விண்ணப்பதாரருக்கு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பாயிண்ட் அடிப்படையில் விண்ணப்பம் சரிபார்க்கப்படும். 

  • சம்பளம் (Salary) 
  • கல்வி மற்றும் திறமை (Education and Skills) 
  • பன்முகத்தன்மை (Diversity Contribution) 

 சம்பளம் (Salary) – உள்நாட்டு மக்களுடன் ஒப்பிடும்பொழுது வெளிநாட்டு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்து அவர்களுக்கான பாயிண்ட் கொடுக்கப்படும். 

கல்வி மற்றும் திறமை (Education and Skills) – வெளிநாட்டு விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் திறமை உள்நாட்டு மக்களுடன் சாப்பிடும்பொழுது எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்து அவர்களுக்கான பாயிண்ட் கொடுக்கப்படும். 

பன்முகத்தன்மை (Diversity Contribution) – விண்ணப்பதாரரின் நாடு நிறுவனத்தின் பன்முகத்தன்மைக்கு பங்களித்தால் அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாயிண்ட் கொடுக்கப்படும். 

மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் E-பாஸ்க்கு தகுதி பெற ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள வரம்பு S$5,000 (US$3,700) ல் இருந்து S$5,600 (US$4,140) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு S$5,500 (US$4,100) ல் இருந்து S$6,200 (US$4,600) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்க்கு முன் இருந்த சட்டப்படி, E-பாஸ்க்கு தகுதிபெற முக்கியமான காரியங்களாவன:

  • விண்ணப்பதாரரின் கல்வி  
  • தொழில்முறை தகுதிகள் 
  • அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் போன்றவை. 

மேற்கண்ட நிர்ணயிக்கப்பட்ட சம்பளமானது வயது மற்றும் துறையை பொறுத்து மாறுபடும். 

இதற்க்கு முன் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதில் பெரிய சிரமங்கள் எதுவும் இருந்ததில்லை. உள்ளூர் பணியாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க கடுமையான விதிமுறைகள் இருந்ததில்லை. விண்ணப்பதாரருக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சம்பள வரம்பை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. 

ஆனால் இப்பொழுது மாறப்போகும் இந்த நடைமுறையால் சிங்கப்பூர் வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் வாழ் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவே இந்த மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்துவதிலும் எந்தவித சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாற்றம் உள்நாட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. தற்பொழுது பெருகிவரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சிங்கப்பூர் மக்களிடையே சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்த மாற்றத்தின் மூலம் தங்களுக்கு எற்ற உறுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என சிங்கப்பூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

2024 முதல் காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களை விட உள்ளூர் மக்களுடைய வேலைவாய்ப்பு விகிதம் தான் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts