சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசைப்படும் பல இளைஞர்களில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு அமைந்து விடுகிறது. சிலர் எப்படி சிங்கப்பூர் போவது என்ற குழப்பத்திலேயே அந்த முடிவினை கைவிட்டு விடுகிறார்கள். அதிலும் படிப்பை முடித்த ப்ரஷர்களுக்கு தான் பெரிய குழப்பமே இருக்கும். உங்க எல்லா குழப்பத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் வர விரும்பும் ப்ரஷர்கள் இந்த வழிமுறையை ஃபாலோ பண்ணுங்க.
மாஸ்டர் டிகிரி வரை படித்திருந்தும் வேலை கிடைக்காமல் இருந்தால் சிங்கப்பூரில் உங்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? முதலில் உங்களின் குறிப்பிட்ட துறையில் சிங்கப்பூரில் ஏதேனும் கோர்ஸில் இணைந்து படியுங்கள். அதன் மூலம் நல்ல வேலையை தேடிக்கொள்ள முடியும். 6 மாதம் மற்றும் 1 ஒரு வருட காலத்தில் இருக்கும் கோர்ஸை முடித்து இன்டர்ன்ஷிப் முடித்தவுடன் S pass அல்லது E pass வாங்கிவிடலாம். ஆனால் இதில் படிப்புக்காக கட்டும் செலவுகள் அதிகம். ஆனால் ஏஜென்ட்டிடன் காசு கட்டி வரும் போதும் இதே போலவே செலவுகள் இருக்கும். படிச்ச துறையிலே வேண்டும் என்றால் இந்த வழி தான் சிறந்தது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “New Pass” அறிவிப்பு.. விண்ணப்பித்த உடனே கையில் பாஸ் – இது நல்லா இருக்கே!
டிகிரி வைத்திருந்தும் தன்னால் மீண்டும் படிக்க செலவு செய்ய முடியாது என நினைத்தால் அதற்கும் வழி இருக்கு. சிங்கப்பூர் வேலைக்காக இருக்கும் அதிகாரப்பூர்வ ஆப்பில் சென்று உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பம் போடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களே உங்களை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து 2 அல்லது 3 மாதம் ட்ரைனிங் கொடுத்து வேலையை உறுதி செய்வர். இதில் காசு செலவு இருக்காது. மீறி யாரும் காசு கேட்டால் கொடுக்காதீர்கள். மேலும், இது வெளிநாட்டினருக்கு கிடைப்பது கொஞ்சம் அரிது தான்.
அடுத்த எல்லாருக்கும் தெரிந்த வழி. ஏஜென்ட்டை வைத்து சிங்கப்பூருக்கு வரலாம். ஆனால் இவர்களை தேர்வு செய்யும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். நன்றாக தெரிந்தவர்கள் மூலமே சிங்கப்பூருக்கு வர வேண்டும். சமூக வலைத்தளங்களில் பார்த்தோ தெரியாதவர்கள் மூலமோ வராதீர்கள். அது உங்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுக்கும். அவர்கள் உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடுவர். கிடைக்காத பட்சத்தில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேறு வேலையை 99 சதவீதம் வாங்கி கொடுத்து விடுவார்கள். ஆனால் மிகப்பெரிய லட்சங்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு நம்பி அனுப்பும் பெற்றோர்.. பணத்தை வீணடிக்காமல் இருக்க “Best Choice” – S Pass, E Passஐ விட சிறந்தது Skilled Test
மேலும், படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் Skilled test என்பது மிக சிறந்த வழி. தமிழ்நாட்டில் அதற்காக இருக்கும் நிறுவனங்களில் சேர்ந்து வேலையை கற்றுக்கொண்டு சிங்கப்பூரில் அவர்கள் மூலமே ஒரு கம்பெனி கிடைத்து வேலைக்கு வந்துவிடலாம். ஆனால் இந்த வேலை கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். S passஐ ஒப்பிடும் போது சம்பளமும் சுமாராக தான் இருக்கும்.
கொஞ்சமும் படிக்காதவர்களுக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைக்கும். Shipyardல் வேலை இருக்கும். இதுவும் ஏஜென்ட் மூலமாக தான் அதிக அளவில் பணம் கட்டி வர வேண்டும். தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வேண்டிய தேவை இருக்காது. சம்பளம் குறைவாக இருக்கும். நிறைய படித்தவர்களும் shipyard பெர்மிட்டில் வந்து S pass க்கு மாறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.