விமான பயணங்களை பொருத்தவரை சீசன் நேரங்களில் டிக்கெட் அதிகமாகவும் மற்ற நேரங்களில் ஓரளவிற்கு குறைவாகவும் இருக்கும். ஆனால் முதன்முறையாக சர்வதேச அளவில் விமான எரிபொருளின் விலை குறைந்ததன் காரணமாக விமான டிக்கெட் களின் நிலையானது குறைக்கப்பட்டுள்ளது என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுவாக விமான டிக்கெட்டுகளில் பயண கட்டணம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் எரிபொருளின் விலையானது தொடர்ந்து உயர்ந்ததை அடுத்து கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் எரிபொருள் கட்டணத்தையும் கூடுதலாக வசூலிக்கும் பொருட்டு இண்டிகோ நிறுவனம் டிக்கட்டுகளில் எரிபொருளுக்கான கட்டணத்தையும் குறிப்பிட்டு டிக்கெட் விலையை நிர்ணயித்தது.
சர்வதேச அளவில் எரிபொருளின் விலையானது குறைந்து வருவதால் எரிபொருள் விலையை நீக்க இண்டிகோ நிறுவனம் உள்ளது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டணங்கள் குறைய கூடும் என இண்டிகோ தெரிவித்துள்ளது.