TamilSaaga

உலக அளவில் மக்களை கவர்ந்த நம்ம ஊர் ‘இட்லி’… உலகின் சிறந்த உணவுப் பொருட்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை!

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டு மக்களை வேறுபடுத்துவது உணவு,உடை மற்றும் கலாச்சாரம்தான். இவை மூன்றிலும் முக்கியமான இடம் உணவிற்கு உண்டு. ஏனென்றால் எந்த நாட்டில் என்ன உணவு பிரபலம் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பொதுவாகவே நம்மில் உண்டு. வெளிநாடுகளுக்கு சென்றாலும், வெளியூர்களுக்கு சென்றாலும் அங்கே எந்த உணவு பிரபலம் என்பதை அறிந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

குறிப்பாக நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் நாட்டிற்கு ஒரு உணவு கலாச்சாரம் என்றில்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் உணவு கலாச்சாரம் வேறுபடும். இதனால்தான் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்தியாவின் சிறப்பம்சம். இந்நிலையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற உணவுகள் என்ன என்ற பட்டியலில் இந்திய உணவுகள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. பொதுவாகவே உலகளவில் இந்தியன், சைனீஸ் மற்றும் இத்தாலியன் உணவுகள் பிரபலம்.

இவற்றிலும் போட்டி போட்டுக் கொண்டு நம் இந்திய உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது என்றால் அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் தானே. இந்திய அளவில் உணவு பட்டியலில் மும்பை, ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய ஐந்து நகரங்களில் உணவு பொருட்கள் உலக அளவில் பிரசித்தி பெற்ற முதல் 100 உணவுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மும்பை நகரின் இனிப்பு வகைகள் 35 வது இடத்தை உள்ளது. ஹைதராபாத்தில் பிரியாணி 39 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது. உலக அளவில் உள்ள மக்களை நமது தமிழ்நாட்டின் இட்லி மற்றும் தோசை கவர்ந்து உள்ளதால் 65 வது இடத்தை பிடித்துள்ளது.

Related posts