TamilSaaga

உலகமே திரும்பிப் பார்க்கும் அம்பானி வீட்டுத் திருமணம்! அப்படி என்ன தான் பன்றாங்க ?

உலக பணக்கார வரிசையில் 11 வது இடம் ஆசிய பணக்காரர்களில் முதலாவது இடம் என பணக்கார வரிசையில் நாள் தோறும் முன் சென்று கொண்டிருக்கும் அம்பானி குடும்பம் தான், தற்போதைய டாக் ஆஃப் தி டவுன்!

அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மார்ச் மாதம் முதலே கலைநிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. அம்பானி வீட்டு விசேஷம்னா சும்மாவா? விநாயகர் ஊர்வலம் கூட ஊரே மெச்சும் படி தான் நடக்கும். தனது இளைய மகனின் கல்யாணத்தை அவ்வளவு குறைவாக நடத்தி விடுவார்களா என்ன?

அம்பானி பற்றி சொல்ல வேண்டுமானால் இவரின் மொத்த சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலர்கள் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை தற்பொழுது நிர்வகித்து வருகிறார். அவரது தங்கையான இஷா அம்பானி ஜியோ நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இளைய மகனான ஆனந்த் அம்பானி வேறு சில தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருகிரர். ஆனந்த் அம்பானி திருமணம் செய்துகொள்ளப்போகும் ராதிகா மெர்ச்சண்ட்-ன் தந்தை விரேன் மெர்ச்சண்ட் பாராமெடிக்கல் துறையில் தொழிலாலதிபர். இவரின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 750 கோடி ஆகும். 

மார்ச் மாதம் ஜாம்நகரில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் உலகெங்கும் இருந்து பல தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் இதில் பங்கேற்றனர். இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால் ரிஹானாவை அழைத்து வர இவர்கள் செய்த செலவு தான்! 40 நிமிட கலைநிகழ்ச்சிக்காக ரிஹானாவிற்கு 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய்!

அது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது நடைபெற்று வரும் திருமண கொண்டாட்டத்தில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்-ன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக அவருக்கு 10 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன. இந்திய மதிப்பில் 83 கோடி! 

இது தவிர பிரமாண்ட மலர் அலங்காரங்கள், உணவு ஏற்பாடுகள் என கோடி கோடியாய் செலவுகள் செய்யப்படுகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய் ஜாம் நகரில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்திற்க்காக அங்கு அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ராணுவ விமானத்தளம் சர்வதேச விமானங்கள் வந்திறங்கும் அளவிற்கு சகல வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டது. 

இப்படி இந்த திருமணத்திற்க்காக இவர்கள் செய்யும் ஒவ்வொரு செலவும் பார்ப்போரை வாய்பிளக்க வைக்கிறது. இது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பணத்தை விரயம் செய்கிறார்களா எனவும், இந்திய நாட்டின் வறுமையில் உள்ள மக்களுக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டால் நன்றாயிருக்கும் எனவும், நாட்டின் செல்வம் குறிப்பிட்ட இடத்தில தேங்கியுள்ளதாகவும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் இந்த கொண்டாட்டத்தை பலர் ஆதரிக்கின்றனர். அவர்கள் பணம் அவர்கள் உரிமை எனவும்,  இவர்கள் மூலம் நாட்டின் சிறப்பு பிரதிபலிக்கப்படுவதாகவும் பலர் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க இந்த செலவுகளால், இது போன்ற கொண்டாட்டங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த வருவாய் அவர்களது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஒரு சாரார் தெரிவித்து வருகின்றர். மேலும் இந்த கொண்டாட்டங்களால் இந்தியாவின் ஹோட்டல் தொடர்பான பொருளாதாரம் வலுப்படும். பல நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வரவுள்ளதால் ஒரு பொருளாதாரமுனேற்றம் ஏற்படவே வாய்ப்புள்ளதாக பலர் கருது தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த கல்யாணம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts