விமானப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், மார்ச் 22 முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், திருச்சி – சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய சேவையால், திருச்சியில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம் போட்டியைச் சமாளிக்க அதிரடியாக விலையை குறைத்துள்ளது.
புதிய கட்டண விவரங்கள்:
சென்னை – திருச்சி: ₹1,499 (குறைந்தபட்சம்)
திருச்சி – சென்னை: ₹2,499 (குறைந்தபட்சம்)
பெங்களூரு – திருச்சி கட்டணங்கள்:
பெங்களூரு – திருச்சி: ₹3,199
திருச்சி – பெங்களூரு: ₹2,899
இந்த விலை குறைப்பு மூலம், திருச்சி மக்கள் பெரிதும் பயனடைவார்கள். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் வருகை, பயணிகளுக்கு கூடுதல் வசதியையும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வாய்ப்பையும் அளிக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு: தினசரி நேரடி விமான சேவை தொடக்கம்!
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விரைவில் சென்னையில் இருந்து பெங்களூரு, போர்ட் பிளேயர், ஹைதராபாத் உட்பட பல ஊர்களுக்கு இணைப்பு விமான சேவையையும் வழங்க உள்ளது.
விரைவில் “திருச்சி – சென்னை” தடத்தில் வசதியான புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானப் பயண அனுபவத்தை பயணிகள் பெறலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விரைவில் ஒரே பயணச்சீட்டில் (PNR) மூலம், சென்னையிலிருந்து பெங்களூரு, போர்ட் பிளேயர், ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு இணைப்பு விமான சேவைகளை வழங்கும் என அறிவித்துள்ளது.
மேலும், திருச்சி – சென்னை தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தைப் பயன்படுத்த உள்ளது. இந்த விமானம் மிகவும் வசதியானது மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. எனவே, பயணிகள் மிகவும் சௌகரியமான பயணத்தை அனுபவிக்க முடியும்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
News Source:
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620007
9600223091
www.nanthanaair.com