TamilSaaga
Loan

வெறும் 4% வட்டியில் 3 லட்சம் கடன்! அப்ளை செய்வது எப்படி?

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவது என்றாலே.. முக்கால்வாசி பேரின் கதையை கேட்டுப் பார்த்தால், “கடன் வாங்கிட்டு தான் வந்திருக்கேன் பாஸ்” என்பார்கள். ஏனெனில், இந்தியாவில் வேலைப் பார்க்கும் கம்பெனி மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் உள்ள கம்பெனியின் வேலைக்கான Recruitment அறிந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, உங்கள் இரண்டு கைகளில் உள்ள விரல்களை மிஞ்சாது.

இத்தனைக்கும் பெரும்பாலானோர் இங்கு வேலைக்கு வருவது ஒர்க் பெர்மிட்டில் தான். அதுவும் ஏஜென்ட் மூலமாகத் தான் வர முடியும். அங்கு இங்கு அலைந்து கடன் வாங்கி அவர்களிடம் பணத்தை செலுத்தி, அதுமட்டுமின்றி தனியாக Skilled Test சென்டர்களின் டெஸ்ட் அடித்து, அதற்கான ரிசல்ட் வரும் வரை காத்திருந்து, வேலைக்கான ஆர்டர் வந்து, சிங்கப்பூருக்கு குறைவான விலை பார்த்து டிக்கெட் போட்டு இங்கு வந்து சேர்ந்து, எல்லாவற்றுக்கும் மேல் நல்ல ஓனர் அமைந்து வேலை கிடைப்பதற்குள் தலை சுற்றிவிடும்.

எப்படியும் குறைந்தது 3 லட்சமாவது கடன் வாங்கி தான் பலரும் சிங்கப்பூர் வந்திருப்பார்கள். அதனை எத்தனை வருடத்தில் திருப்பி எடுப்பார்கள் என்பது அவரவர் சம்பளம் மற்றும் அவர்களது மற்ற கமிட்மென்ட் பொறுத்தது. இதில், பெரும்பாலானோர் விவசாய குடும்ப பின்னணியில் இருந்து தான் வந்திருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த செய்தி. இந்திய அரசு, விவசாயிகளுக்கு வெறும் 4% வட்டியில் 3 லட்சம் வரை கடன் கொடுக்கிறது. அதனை எப்படி பெறுவது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) எனும் திட்டம் மூலம் இந்த கடன் வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். இதுகுறித்து இந்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.3 லட்சம் வரையிலான இந்த கட்னுக்கு எந்த கட்டணமும் கிடையாது. அதாவது Processing Fee, Documents Check உட்பட வேறு எந்த சர்வீஸுக்கு கட்டணமே கிடையாது.

அரசு வழங்கிய தகவலின்படி, ரூ. 3 லட்சம் வரையிலான கேசிசி கடன்களுக்கான செயலாக்கம், ஆவணங்கள், ஆய்வு மற்றும் பிற சேவைக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் உள்ளது. எவ்வாறாயினும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு, செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆய்வுச் செலவுகள் போன்ற கட்டணங்கள் தனிப்பட்ட வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

இதுகுறித்து இந்திய அரசின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறுகையில், “விவசாயிகளுக்கு இந்த கேசிசி திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும் கடனானது, ஆண்டுக்கு 7 சதவிகித சலுகை வட்டி விகிதத்தில் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த கடனை உடனடியாக திரும்பச் செலுத்தும் விவசாயிகள் 3% வட்டி மானியம் பெறலாம். இதன் மூலம், வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 4 சதவிகிதமாகக் குறைக்கலாம்.

கேசிசி கார்டை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த கேசிசி கார்டு திட்டத்தில் இணைய, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் உங்கள் வங்கியின் வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.

அதில், கிசான் கிரெடிட் கார்டு ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

பிறகு, “Apply” என்ற பட்டனை கிளிக் செய்யவும்,

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பிய பிறகு, “submit” என்பதை கிளிக் செய்தால் போதும்.

இதற்கு நீங்கள் தகுதி உடையவராக இருந்தால், 3 – 4 வேலை நாட்களுக்குள் வங்கி சார்பில் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். சிங்கப்பூரில் உங்கள் வேலையில் ஓரளவு செட்டில் ஆகி, மாதாமாதம் வீட்டுக்கு பணம் அனுப்பும் வரை, உங்கள் குடும்பத்தார் உங்கள் எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை. மேற்கொண்டு அதிக வட்டிக்கு வேறு யாரிடமும் பணமும் பெறத் தேவையில்லை.

 

 

Related posts