கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல் வனிதா செல்லும் இடமெல்லாம் சர்ச்சை தான்..
விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியேறினார். அதற்கு ரம்யா கிருஷ்னன் தான் காரணம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவத்தை பற்றி பேசாத இணையவாசிகளே இல்லை எனலாம்.
நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் கலந்துக்கொள்ளும் இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இதுவரை காணாத டிஆர்பி ரேட்டிங்கை ஒரேநாளில் வனிதா வாங்கி தந்தார்.
.
வனிதா ஆடிய டான்ஸ் பற்றி ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் விமர்சித்தது பிடிக்காமல் ஷோவிலிருந்தே வெளியேறினார் வனிதா. தன்னை மற்றவர்கள் உடன் ஒப்பிடாதீர்கள் என்றும் அவர் சண்டை போட்டார் இதனால் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு தான் வனிதா செட்டில் இருந்து வெளியேறினார்.
இதுதான் வெளியில் தெரிந்த கதை. ஆனால் இதற்கு பின்பும் பல சம்பவங்கள் அரங்கேறின. காளி வேடமிட்டிருந்த வனிதா அசிங்கமாக பேசி உள்ளார். நடுவர்களையும் திட்டி இருக்கிறார் போல. இந்த விவகாரம் நகுல் மற்றும் வனிதா காதுகளுக்கு வந்திருக்கிறது. இந்த சர்ச்சை பற்றி ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டால் அவர் நோ கமெண்ட்ஸ் என்று மட்டும் சொல்லி ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால் நகுல் இதுப்பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில் “நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்
நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மா அமர்ந்துகொண்டு இருந்தார், அதனால் அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜி அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். சாக்கடைக்குள் செல்ல நான் விரும்பவில்லை எனக்கு தான் அசிங்கம் “ என்றும் குறிப்பிட்டுள்ளார்.