“சார்பட்டா பரம்பரை”, இந்த ஆண்டு இணையத்தில் வெளியான பல சிறப்பான படங்களில் இதுவும் ஒன்று. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி போன்ற சிறந்த பல நடிகர்கள் நடித்துள்ள நிலையில் இதுவரை தமிழ் திரையுலகம் அறிந்திராத இன்னும் பல சிறந்த நடிகர்களை இந்த திரைப்படம் அடையாளம் காட்டியுள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல. குறிப்பாக டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்த ஷபீர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ஆர்யா “நான் கடவுள்” படத்தில் நடித்த பிறகு அவர் மீது அதுவரை இருந்த கண்ணோட்டமே முற்றிலும் மாறியது. சாக்லேட் பாய் என்ற சாயத்தில் இருந்து வேறொரு பரிமாணத்திற்கு மாறினார் ஆர்யா. பள்ளி பருவத்தில் படிப்பிலும் படு கெட்டியான ஆர்யா மிக பெரிய ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் வல்லுனராக வருவார் என்று பலர் எண்ணிய நிலையில் இன்று தனக்கென தனி ரசிகர்கூட்டதுடன் சிறந்த நடிகராக வலம்வருகின்றார்.
மேலும் ஆர்யா ட்விட்டர் உலகிலும் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அளவில் உடற்பயிற்சி செய்து அதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆர்யாவை டேக் செய்தால் போதும். நிச்சயம் அவர்களை இன்னும் ஊக்குவிக்கும் முறையயில் அந்த பதிவை லைக் செய்து பல கமெண்ட்களையும் பதிவிடுவார் ஆர்யா. இந்நிலையில் இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஒரு சிறந்த நடிகரின் ட்விட்டர் வருகையை குறித்துள்ளது.
சார்பட்டா படம் வெற்றியடைந்த அளவிற்கு அந்த படத்தில் வரும் கபிலன் மற்றும் அவரது வாத்தியார் மிதிவண்டியில் செல்லும் காட்டிச்சியும் MEME வடிவில் படுபிரபலம். இந்நிலையில் அந்த கட்சியை மேற்கோள்கட்டி ஆர்யா வெளியிட்ட பதிவில் “வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே, பாக்சிங்கவிட இது ரத்த பூமி. உன்னோட பெயர்ல இங்கே நிறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான் தாண்டானு நீ உள்ள வந்த பாத்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போகலாம்” என்று ட்விட்டர் உலகிற்கு வருகை தந்திருக்கும் நடிகர் பசுபதியை வரவேற்றுள்ளார்.