சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று சிங்கப்பூரில் பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் 10 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளது.
போதைப்பொருள்கள் கடத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் இருவரும் மலேசியர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய ஆடவருக்கு வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது. துவாஸ் சவுத் பகுதியில் கைதான அவருடைய வாகனத்தில் இருந்து சுமார் 7 கிலோ கிராம் அபின் எனப்படும் போதை பொருள் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் 50 வயது சிங்கப்பூரார் கைதானார். மற்றும் 33 வயது சிங்கப்பூரரும் 30 வயது மலேசியரும் கைதானார்கள்