சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் தனது இளம் வயது வளர்ப்பு மகள்கள் இருவருக்கும் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலியல் ரீதியான தொல்லைகளை அளித்துவந்துள்ளார். அவரது இந்த செயல்களுக்காக, 38 வயதான அந்த நபருக்கு நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 6) உயர் நீதிமன்றத்தில் 28 வருட சிறைத்தண்டனையும் 18 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்தபோது அந்த சகோதரிகளுக்கு 14 மற்றும் 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 2017 முதல் ஜூலை 2018 வரை நடந்துள்ளது. தங்களுடைய வளர்ப்பு தந்தை அவர் என்பதால் அவருடைய வருமானம் இல்லாமல் தங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் என்பதற்காக அந்த சகோதரிகள் இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை.
ஒருகட்டத்தில் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், தனது தாயிடம் தனக்கு நடந்த பாலியல் தாக்குதல்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அது அவரது வளர்ப்புத்தந்தை மூலம் உருவான கருவல்ல, மாறாக அவரது ஆண் நண்பர் மூலம் உருவான கரு என்பது பின்னர் தெரியவந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட அந்த இரண்டு இளம்வயது பெண்களை உடைய ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தொடக்க காலத்தில் அந்த இரண்டு பெண்கள் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். அந்த மூத்த பெண்ணும் தனது சொந்த தாயை விட தனது வளர்ப்பு தந்தை மீது மிகுந்த பாசத்துடன் இருந்த இருந்த நிலையில் அந்த மூத்த பெண்ணை 4 மாத இடைவெளியில் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு இளைய மகளையும் அவர் காமஇச்சைக்கு பலியாகியுள்ளார்.