TamilSaaga

பண்ணைக் காரருக்கு 12 கோடியா! எப்போ? எங்கே? எப்படி?

எல்லாருக்குக்கும் பணக்காரராக வேண்டும் என்பது ஆசை தான்! பலருக்கு உழைப்பு, சிலருக்கு குறுக்கு வழி, இன்னும் மிகச் சிலருக்கு அதிர்ஷ்டம்.
அதிர்ஷ்டத்தால் பணக்காரராக மாறுவது அவ்வளவு சாதாரணமல்ல. பல வழிகளில் அதிர்ஷ்டம் நம் கதவைத் தட்டும்.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்-னு சொல்லுவாங்க! அது பலருக்கு அமைவதில்லை. அமைந்த சிலருக்கு அது மிகப்பெரும் கனவாக இருக்கும். இங்கே இன்று இரவு ஏழையாகத் தூங்குபவர் நாளை இரவு கோடிக்கு அதிபதியான கதைகள் ஏராளம்.

இப்படித் தான் ஒருவர் கோடிக்கு அதிபதியான கதை இங்கு நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில், பண்ணை வைத்திருக்கும் ஒருவர் ஐந்து வருட முயற்சிக்குப் பின் இப்பொழுது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

நண்பர் ஒருவர் வீடு விசேஷத்துக்கு போயிருந்தவருக்கு இந்த செய்தி கிடைத்ததும், திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்த வாழ்வு போல பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஐந்து வருடத்திற்கு முன் சிறிய இழையில் தவற விட்ட அந்தக் கோடிகளை தற்பொழுது கடவுளே தேடி வந்து கொடுத்துள்ளார். என்னடா இது அதெப்படி கடவுள் கொடுப்பாரு-னு கேட்கிறீர்களா? அதாங்க லாட்டரி!

முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே வைத்து மட்டுமே கிடைக்கும் இந்த லாட்டரி பரிசுகளால் ஓவர் நைட்-ல் ஒபாமா ஆகி உள்ளார் தினேஷ் குமார்.

கொல்லம் பகுதியில் உள்ள கருநாகப்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர் தான் தினேஷ் குமார். இவர் விவசாயம் சார்ந்த வேலைகள் பார்த்துவந்துள்ளார். கடந்த சில வருடங்களாக லாட்டரி வாங்கி வந்த இவருக்கு ஐந்து வருடத்திற்கு முன் வெறும் இரண்டு எண்களில் பரிசு தவறிப் போனது. தவற விட்ட அதே பரிசு தற்பொழுது கிடைத்துள்ளது.

பூஜா பம்பர் லாட்டரியில், JC 325526 என்ற எண்ணிற்கு இந்த லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. ஈது தவிர இரண்டாவது பரிசாக 5 பேருக்கு தலா 1 கோடியும், மூன்றாவது பரிசாக இரண்டு பேருக்கு தலா 10 லட்சமும் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி டிக்கெட்- டை, ஜெயக்குமார் லாட்டரி சென்டரில் தான் வாங்கியுள்ளார் தினேஷ். அந்தக் கடைக்காரர்கள் கூறுகையில், தினேஷ் மிக ஆர்வமாக லாட்டரி வாங்குபவர் எனவும் 2019-ல் வெறும் இரண்டு நம்பரில் 12 கோடியை தவற விட்டார், தற்பொழுது மீண்டும் அதனை அவர் வென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

பிடித்தம் போக தினேஷ்-க்கு 7.9 கோடி பணமும் ஏஜெண்ட்-க்கு 1.2 கோடி பணமும் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் மூலம் ஏழைகளுக்கு இயன்ற உதவிகள் செய்யப்போவதாகவும் தினேஷ் தெரிவித்தார்.

கேரளாவில் லாட்டரி என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதால் இது போல பலர் இதன் மூலம் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலும் இது போல ஜாக்பாட் பரிசுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 4D, TOTO போன்ற இரண்டு வகையான ஜாக்பாட் நடைமுறையில் உள்ளது. இது குறித்த தகவல் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்யவும்! 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

 

Related posts