TamilSaaga

Schengen விசா வைத்திருப்பவரா நீங்கள்? மேலும் 10 non-Schengen நாடுகள்! உங்களுடைய பக்கெட் லிஸ்டில் இணைகிறது!

கடந்த காலங்களை விட,   பல்வேறு காரணங்களால்  வெளிநாட்டுப் பயணங்கள்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது.   குறிப்பாக,   வேலை நிமித்தமாக  மற்றும்  சுற்றுலா   காரணங்களுக்காக  சமீபகாலமாக   பயணங்கள் மேற்கொள்வோரின் எண்ணிக்கை  அதிகரித்து கொண்டிருக்கிறது.   இதற்கு ஒரு முக்கிய காரணம்,   பல்வேறு நாடுகள் தங்களுடைய   இமிகிரேஷன்  ப்ராசஸில்  பல   தளர்வுகளை அறிவித்திருப்பது தான். அந்த வகையில் Schengen   நாடுகளைப் பற்றி  தாங்கள் அறிந்திருப்பீர்கள்.  ஆம்,   இன்றைய பதிவில் Schengen   நாடுகளை பற்றியும், சில non-Schengen நாடுகள் அறிவித்திருக்கும் தளர்வுகள் பற்றியும், Schengen   விசா பற்றியும்,   குறிப்பாக இந்தியர்களுக்கு  இந்த விசா முறையில் அறிவிக்கப்பட்டிருக்கும்  கூடுதல்  தளர்வுகள் பற்றியும்,  விரிவாக  பார்க்கலாம்.

முதலில் Schengen நாடுகளைப் பற்றி பார்க்கலாம், Schengen என்றால் என்ன?   

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள  மொத்தம் 29 நாடுகள்  இந்த கூட்டமைப்பில் உள்ளது.  அந்த 29 நாடுகள், பெல்ஜியம்,   பல்கேரியா,   பின்லாந்து,   ஸ்லோவாக்கியா,  ஸ்லோவேனியா,   டென்மார்க்,   இத்தாலி, ஸ்பெயின்,  குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, எஸ்தோனியா, கிரீஸ், மால்டா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, போலந்து, லாட்வியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து, லிதுவேனியா, லக்சம்பர்க், ஹங்கேரி, போலந்து, போர்ச்சுகல் மற்றும்  ருமேனியா.  

கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  இந்த ஐரோப்பிய schengen area   உருவாக்கப்பட்டு,   அதனுடைய  உள்   எல்லை சோதனைகள் ரத்து செய்யப்பட்டது.   இதன் மூலம், இணைப்பில் உள்ள நாடுகளுக்கு  நீங்கள்  எல்லை சோதனைகள் இல்லாமல்  சென்று வரலாம். இந்த நாடுகள் தங்களுடைய எல்லை சோதனைகளை   நீக்கி இருப்பதால்   பயணிகள்,  இந்த அமைப்பில் உள்ள  நாடுகளுக்கு  சுதந்திரமாக  பயணம் செய்ய முடியும்.   ஆரம்ப காலகட்டத்தில்,   ஒரு சில நாடுகளை இந்த  எல்லை சோதனை முறையை ரத்து செய்து   இணைந்திருந்தது,   ஆனால் தற்போது பல நாடுகள்  இதில்  இடம் பெற்றிருக்கிறது.   அந்த வகையில்  மேலும்  10 non-schengen   நாடுகள்  இந்த கூட்டமைப்பில் தங்களை  இணைத்து இருக்கிறது.   அது என்னென்ன நாடுகள் என்பதை பற்றி   இந்த பதிவின் கடைசிப் பகுதியில்  பார்க்கலாம்.

சரி,   யார் வேண்டுமானாலும்  இந்த schengen   பகுதிக்குள்  பயணிக்க முடியுமா? 

இந்த schengen அமைப்பில் உள்ள நாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என்றால்  நீங்கள் நிச்சயமாக schengen  விசா எடுத்திருக்க வேண்டும்.   ஆம், schengen  விசா  மூலம் மட்டுமே உங்களுக்கு  இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளை  எல்லை சோதனை இன்றி  பயணிக்க  அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்த விசா எடுப்பதன் மூலம்   எந்த விதமான  ஃபார்மாலிட்டிசும்  இல்லாமல்   இந்த ஏரியாவில்  பயணம் செய்யலாம்.   இந்த விசா  உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து எடுக்க முடியும், ஆனால்   இந்த பதிவில்  நாம்   இந்தியர்களுக்கு  இந்த விசா  எப்படி  எடுப்பது? எப்படி பயன்படுத்துவது?  யார்  பயன்படுத்த முடியும்?  என்பதை பற்றி பார்க்கலாம்.  இந்த schengen   விசா   மூலம் 90 நாட்கள்   வரை   நீங்கள் schengen   அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு  பயணிக்கலாம்.   குறுகிய காலகட்ட பயணத்திற்கு மட்டுமே  இந்த  விசா  அனுமதி அளிக்கும்.

இந்த schengen  விசா   பெற்றவர்கள்,   இந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து  நாடுகளுக்கும் செல்ல முடியும்  தனித்தனி விசா இல்லாமல்!  அதாவது   ஒவ்வொரு   தனி நாட்டுக்கும் விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.   நீங்கள் பெற்ற schengen  விசா  மூலம் அனைத்து நாடுகளுக்கும்  பார்டர் ஃபார்மாலிட்டிஸ்  இல்லாமல் பயணிக்கலாம். எனினும் தங்களுடைய பயணத்திற்கு முன்பு  இந்த  விசா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் ஏனெனில் விசா   பாலிசிகள்  குறுகிய காலங்களில்  மாறக்கூடியவை.

schengen  விசாவில் என்னென்ன  விதங்கள் உள்ளன? 

பொதுவாக schengen  விசா   குறுகிய   காலகட்டங்களுக்கு அதாவது  90 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை  இந்த schengen  ஏரியாவிற்கு செல்பவர்கள் பெறலாம்.   இது மூன்று விதங்களில்   இருக்கிறது. 

  • ஒன்று சிங்கிள் என்ட்ரி விசா
  • மல்டிபில்   என்ட்ரி விசா  
  • ஏர்போர்ட் டிரான்சிட்  விசா

இந்த சிங்கிள் என்ட்ரி சார்  ஒருமுறை  நீங்கள் schengen நாடுகளுக்கு செல்வதற்கு.   அதுவே மல்டி என்ட்ரி விசா   விசா காலம் முடியும் வரை நீங்கள்  எத்தனை முறை வேண்டுமானாலும் schengen நாடுகளுக்கு   பயணிக்கலாம்.   ஏர்போர்ட் டிரான்சிட்  விசா,  சர்வதேச விமான போக்குவரத்தின் போது இணைப்பு விமானத்திற்காக இதை பயன்படுத்த முடியும்.   இந்த விசா பெறுவதற்கு  எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்.   இந்த schengen   நாடுகளுக்கு பயணிக்க விரும்பினால்,   நீங்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறீர்களோ அந்த நாட்டின் தூதரகத்தின் வழியாக  விண்ணப்பிக்க வேண்டும்.  

ஒருவேளை நீங்கள்  பல நாடுகளுக்கு செல்ல விரும்பினால்,   எந்த நாட்டில்  அதிகமான நாட்களை செலவிடுகிறீர்களோ அந்த நாட்டின்  தூதரகத்தில்   விண்ணப்பிக்க வேண்டும்.   அல்லது எல்லா நாடுகளிலும் சமமான நாட்களை செலவிட என்றால்  முதலில் எந்த நாட்டில் இறங்குகிறீர்களோ  அந்த நாட்டின் தூதரகத்தில்  விண்ணப்பிக்க வேண்டும்.   இந்த விசா   விண்ணப்பித்த 15 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் உங்களுக்கு  அனுமதி  அளிக்கப்படும்.   நீங்கள் இந்தியராக இருப்பின் விசா  நிராகரிப்பு சதவீதம்  மிகவும் குறைவு.   எனினும்  நீங்கள் ஸ்விட்சர்லாந்து மூலம் உள்ளே நுழைவதாயின்  எளிமையாக schengen   விசா பெறலாம்.

 இப்பொழுது  இந்த schengen கூட்டமைப்பில்   புதிதாக சேர்ந்த   10 non-schengen   நாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.   மெக்சிகோ,   கொலம்பியா, துருக்கி,   மெக்சிகோ,  ஜார்ஜியா,  பெல்லாரஸ்,   சவுதி அரேபியா,  செர்பியா,   எகிப்து, அருபா மற்றும் மாண்டினீக்ரோ   நாடுகள் ஆகும். Schengen விசா  இருப்பின் மெக்சிகோவிற்கு சுற்றுலா, வணிகம் அல்லது  இணைப்பு விமானங்களுக்காக   செல்ல முடியும். மெக்சிகோவில் இறங்கிய பிறகு பயணிகள்  விசா மற்றும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த schengen   விசா அல்லது US விசா இருப்பவர்கள்   கொலம்பியாவில்   தனிப்பட்ட விசா எதுவும் இல்லாமல்   செல்ல முடியும்.   இந்திய பாஸ்போர்ட்  வைத்திருப்பவர்கள்  கூடுதலாக schengen   விசா வைத்திருப்பவர்கள்   சிங்கிள் என்ட்ரி விசா  மூலம்  ஒரு மாத காலம் துருக்கியில்  பயணிக்கலாம்.   இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ துருக்கிய இ-விசா இணையதளத்தை   பார்க்கவும். கொசோவோ, தைவான் மற்றும் பாலஸ்தீனம்  நாட்டினவரை   தவிர  அனைத்து schengen   விசா வைத்திருப்பவர்களும்   ஜார்ஜியாவுக்கு  விசா இல்லாமல்   செல்ல முடியும்.   அதுவும் 90 ல் இருந்து 180 நாட்கள் வரை ஜார்ஜியாவில்  தங்கலாம்.

schengen   விசா  மூலம்  செர்வியாவில்  90 நாட்கள் வரை கழிக்கலாம்  அதுவும் ஆறு மாதத்திற்குள்.  குறிப்பிட்ட விமான நிலையங்களில் இருந்து   பெலாரஸ்க்கு செல்பவர்கள்  விசா இல்லாமல் அனுமதி அளிக்கப்படுவார்கள்.  

இங்கு நீங்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல்  தங்கலாம்.   சவுதி அரேபியாவிற்கு செல்வதற்கு schengen   விசா  வைத்திருப்பவர்கள்,   அங்கு சென்றவுடன்  90 நாட்களுக்கான வீசா வழங்கப்படும்  அதை 365 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். 

எகிப்து நாட்டிற்கு  சிங்கிள் என்ட்ரி விசா 30 நாட்களுக்கு  அனுமதி அளிக்கப்படும்  அதை மூன்று மாத காலகட்டங்களுக்குள்  உபயோகப்படுத்த வேண்டும். அருபா நாட்டில் மல்டிபிள் என்ட்ரி schengen   விசா மூலம்  30 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை  அனுமதி அளிக்கப்படும். மல்டிபிள்-என்ட்ரி schengen விசாவைக் கொண்ட பயணிகள் மாண்டினீக்ரோவில் 30 நாட்கள் வரை தங்கலாம்,  மேலும் ஆண்டிற்கு 180 நாட்கள் வரை  தங்கலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்து நாடுகளும்   சுற்றுலா செல்வதற்கு  தகுந்த  இடமாக  இருக்கும்.   உங்களுடைய விடுமுறை தினங்களை  கழிக்க தற்போது மேலும் 10 நாடுகள் schengen   ஏரியாவிற்குள் இணைந்ததால்  இந்த முறை புதிய இடத்திற்கு உங்களுடைய சுற்றுலாவை திட்டமிடலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts