சிங்கப்பூர் : உலகில் உள்ள காஸ்ட்லி நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இங்கு சிரமமின்றி வாழ்வதற்காக Part-Time வேலை பார்ப்பது என்பது மிகவும் அவசியம் ஆகிறது. சிங்கப்பூரை பொருத்தவரை பகுதி நேர வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரில் இருப்பது போது இங்கு student pass மூலம் படிக்க வரும் மாணவர்கள் தங்களுக்கான ஓய்வு நேரத்தில் Part-Time வேலை செய்து, அதன் மூலம் தங்கள் செலவிற்கான பணத்தை சம்பாதிக்க முடியும்.
சிங்கப்பூர் Man power ministry விதிகளின் படி, student pass மூலமாக சிங்கப்பூரிற்கு கல்வி பயில வரும் சர்வதேச மாணவர்கள் அனைவருமே Part-Time வேலை செய்வதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். இவர்கள் வாரத்திற்கு 16 மணி நேரம் Part-Time வேலை செய்ய முடியும். அதே சமயம் விடுமுறை நாட்களில் எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்வதற்கு இவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் சிங்கப்பூரில் Part-Time வேலை செய்யும் மாணவர்களுக்கு சில குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும்.
Part-Time வேலை செய்யும் மாணவர்களுக்கான தகுதிகள் :
- சிங்கப்பூரில் Part-Time வேலை செய்யும் student pass வைத்திருக்கும் மாணவர், சிங்கப்பூரில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் முழு நேர course ல் சேர்ந்து படிப்பவராக இருக்க வேண்டும்.
- ICA அங்கீகாரத்துடன் வழங்கப்பட்ட செல்லத்தக்க student pass வைத்திருக்க வேண்டும்.
- சிங்கப்பூர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலில் அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனம் இடம்பெறவில்லை என்றால் அவர், சிங்கப்பூரில் Part-Time அல்லது விடுமுறை நாட்களில் full time வேலை பார்க்க தகுதி அற்றவர் ஆவார்.
- வாரத்திற்கு அதிகபட்சமாக 16 மணி நேரம் மட்டுமே அந்த மாணவர்கள் Part-Time வேலை செய்ய வேண்டும்.
- சிங்கப்பூரில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்து விட்டு, அதே கல்வி நிறுவனத்தில் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களும் Part-Time வேலை செய்வதற்க தகுதி பெற்றவர்கள்.
- student pass வைத்திருந்து அதன் மூலம் Part-Time வேலை செய்யும் மாணவர்கள், வேலை செய்வதற்காக தனியாக Work Permit/Pass வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
- Part-Time வேலை செய்யும் மாணவர் 14 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பள்ளி படிப்பவர்கள் 16 மணி நேரம் வரை Part-Time வேலை செய்ய அனுமதி கிடையாது.
- கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தொழில் சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே அந்த மாணவர் Part-Time வேலை செய்ய முடியும். அதாவது தங்களின் படிப்பு செலவு போன்ற விஷயங்களுக்காக Part-Time வேலை செய்வதற்கு அனுமதி உண்டு.