நமது சிங்கப்பூரின் தேசிய பழம் எது தெரியுமா?
ஆம்! சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், துரியன் பழங்கள் என்று. மலேசிய மொழியில் ‘முள்’ என்றால் துரியன் என்று அர்த்தம். இந்த பழத்தின் மீது முட்கள் அதிகமாக இருப்பதால், துரியன் என்ற பெயர் இதற்கு வந்தது.
இதனை குழந்தை வரம் தரும் அற்புத பழம் என்றும் சொல்வார்கள். இதில், வைட்டமின் சி,பி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் வைட்டமின் பி6, தியாமின், ரைபோஃப்ளேவின், ஃபோலேட், மற்றும் நியாசின் ஆகியவையும் உள்ளன.
உங்கள் கை, கால் நகங்களில் ஏற்படும் நகம் சார்ந்த அனைத்து வித பிரச்சனைகளுக்கும் துரியன் பழத்தின் வேர்களை அரைத்து பயன்படுத்தினால், உடனே தீர்வு கிடைக்கும்.
காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் துரியன் மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதன் மூலம், காய்ச்சலை சரி செய்யலாம்.
துரியன் பழத்தில் ஆன்டி – ஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழம், உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. எனவே, புற்றுநோய் வராமல் தடுக்க, துரியன் பழங்களை உண்டு வரலாம்.
துரியன் பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. துரியன் பழம் ஆழமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதம். இதில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இரத்த சோகை விரைவில் குணமாகிறது.
அதேபோல் இந்த பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருக்கும் பட்சத்தில், துரியன் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.