வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கு ‘Duty Free Shop’ என்பது பழக்கப்பட்ட வார்த்தை தான். ஆனால், முதன் முதலாகவோ அல்லது ஒன்றிரண்டு பயணம் மேற்கொண்ட பலருக்கு இதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி ‘Duty Free Shop’ பற்றி தெரியாதவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் உதவலாம். அது என்ன ‘Duty Free Shop’? ரொம்ப சிம்பிள்… நீங்கள் இந்த கடையில் வாங்கும் பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதே இதன் அர்த்தம். பொதுவாக நீங்கள் வெளியில் எந்த கடையில் என்ன பொருள் எடுத்தாலும், அது அத்தனை வரிகளையும் உள்ளடக்கியே உங்களிடம் விற்கப்படும்.
உதாரணமாக ஒரு பேஸ்ட்டின் உற்பத்தி விலை 10 ரூபாய் என்றால், அது அனைத்து வரிகளையும் சேர்த்து 25 ரூபாய்க்கு உங்களிடம் விற்கப்படும். ஆனால், ‘Duty Free Shop’-ல் நீங்கள் அதே பேஸ்ட்டை 10 ரூபாய்க்கே வாங்க முடியும். இந்த கடைகள் சர்வதேச விமான விமான நிலையங்களில் அமைக்கப்படும். இதனால், பயணிகள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வரிகளின்றி வாங்க முடியும்.
அந்த வகையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் பயணிகளின் ஏகப்பட்ட கோரிக்கைகளுக்கு பிறகு மீண்டும் ‘Duty Free Shop’ திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கு செயல்பட்டு வந்த கடை, 2018ல் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக மூடப்பட்டது. அதன் பிறகு, 4 வருடம் அது திறக்கப்படவே இல்லை.
இந்த சூழலில், மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியின் மூலம் மீண்டும் இன்று (ஜூன்.24) முதல் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் கைப்பை தொடங்கு மதுபானம் வரை அனைத்தும் வரியின்றி விற்கப்படுகிறது. எலக்ட்ரானிக் பொருட்களும் இங்கு விற்பனையாகிறது. ஸோ, சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வீட்டுக்கு செல்வோர், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கள் பயண திட்டத்தை அமைத்துக் கொண்டால், குறைந்த செலவில் வீட்டுக்கு பொருட்களை அள்ளிச் செல்லலாம்.