இந்த டிஜிட்டல் உலகில் விமான பயணம் என்பது தற்போது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டாலும் கூட பலரும் விமானங்களில் பயணிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பதிவில் வேறு ஒருவரின் துணை இன்றி மைனர் பயணி ஒருவர் விமானத்தில் பயணிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை 18 வயதிற்கு கீழ் உள்ள மைனர் பயணிகள் விமானத்தில் தனியாக பயணிக்க சில Form-களை பூர்த்தி செய்யவேண்டும். பயணத்திற்கு முன்பாக அந்த மைனர் பயணியிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா இருக்க வேண்டும். உள்நாட்டு பயணம் என்ற பட்சத்தில் டிக்கெட் இருக்க வேண்டும்.
மேலும் பயணிக்கும் விமான சேவை நிறுவனத்திடம் இருந்து Unaccompanied Minor Request for Carriage form பெற்று அதை பூர்த்தி செய்யவேண்டும்.
அதில் மைனர் பயணி புறப்படும் விமான நிலையத்தில் இருந்து அவரை வழிஅனுப்புவதற்கு அவருடன் 18 வயது நிரம்பிய ஒருவர் வரவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அந்த Formல் அவர் பெயர் மற்றும் பிற தகவல்களை கொடுத்து கையெழுத்திட வேண்டும்.
அதே போல மைனர் பயணி தரையிறங்கும் விமான நிலையத்தில் அவரை அழைத்துக்கொள்ள 18 வயது நிரம்பிய ஒருவர் வரவேண்டும். அவரும் பயணியை தன்னுடன் கூட்டிச்செல்லும் முன் அந்த படிவத்தில் அவரது தகவல்களை அளிக்கவேண்டும். இந்த முறையில் தான் ஒரு மைனர் பயணி தனியாக விமானத்தில் பயணிக்க முடியும்