வெளிநாட்டில் வேலை தேடத் தொடங்கும் பலரின் முதல் தேர்வு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இதற்கு பல முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். அதைப்பற்றிதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
சிங்கப்பூரில் வாழும் போது புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் நாட்டை போலவே உணர்வார்களாம். அதிலும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு சிங்கப்பூர், இன்னொரு நாடு போன்ற உணர்வை கொடுத்ததே இல்லை. காரணம் இங்கு தான் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்களால் தான் சிங்கப்பூரின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் இருப்பதால், சிங்கப்பூர் அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இதையும் படிங்க: இனி பல லட்சங்கள் குறையும்… வேலைக்கு வர ஏஜென்ட்டினை தேடி அலைய வேண்டாம்… careers finder வசதியை அறிமுகப்படுத்த இருக்கும் MOM!
`சிங்கப்பூரில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்போதுமே கௌரவமாக நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை எந்த நிறுவனமும் மறுக்க கூடாது’ என்பதை பிரதமர் லீ சியான் லூங் ஒவ்வொரு முறையும் உறுதியாக தெரிவிப்பார்.
வாழத் தகுதியான உலக நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் இருப்பதாக ஆய்வு முடிவுகள் பல உறுதி செய்திருக்கின்றன. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கி இருக்கிறது. மற்ற நாடுகளில் இரவில் தனிமையாக நடக்கும்போது இருக்கும் பாதுகாப்பு 69 சதவீதமாகவே இருக்கிறது. ஆனால் சிங்கப்பூரில் இரவில் தனிமையில் நடந்தால் உங்களால் 94 சதவீதம் பாதுகாப்பாகவே இருக்க முடியும் என்கிறது முக்கியமான ஆய்வு.
இதையும் படிங்க: ”படிக்காமல் EPass வேலைக்கு வரலாம்” இப்டி உங்க ஏஜென்ட் சொன்ன நம்பாதீங்க… சிங்கப்பூர் அரசு வைத்திருக்கும் சூப்பர் செக்… இனி fake அடிக்க முடியாது
இதனால் தான் வெளிநாட்டினர் பலர் வேலைக்காக சிங்கப்பூரை நாடுகின்றனர். தற்போது சிங்கப்பூரின் பணியிடங்களில் Safety Time-Out முறைக்கு அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் பணியாளர்களின் எதிர்பாராத இறப்பைத் தவிர்க்கலாம். பல நிறுவனங்கள் இந்த முறையை தொடங்கி நிலையில், சில நிறுவனங்கள் இன்னும் ஆயத்த பணிகளில் இருந்து வருகின்றனர். தற்போது 100,000 தொழிலாளர்களில் இறப்பு விகிதம் 1.1 ஆக இருக்கிறது. STO முறையாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் இது மேலும் குறையும் என சிங்கப்பூர் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் சம்பாதிப்பதைப் போல உயிருக்கும் பாதுகாப்பு முறையாக இருக்கும் என தெரிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் நீங்கள் சிங்கப்பூர் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.
இருந்தும் சிங்கப்பூரில் ஊழியர்களை எத்தனை பாதுகாப்பாக பார்த்து கொண்டாலும் அவர்களின் தினசரி வாழ்க்கை இன்னும் நடைமுறைபடுத்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. சரியான உணவு கிடைக்காமல் அடிக்கடி உடல்நிலை கோளாறில் தவிக்கின்றனர். மேலும், தங்குமிடத்தில் கூட முறையாக சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை. சிங்கை மனிதவளத்துறை அடிக்கடி விசிட் அடித்தால் இந்த பிரச்னைகள் சரி செய்யப்படும் என்கிறார்கள் சில ஊழியர்கள்.