சிங்கப்பூரின் பிரபல Temasek நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பானது கடந்த நிதி ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 380 பில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ற நிதி ஆண்டினை பார்க்கிலும் இந்த நிதி ஆண்டில் சுமார் 25 விழுக்காடு அல்லது 75 பில்லியன் வெள்ளி அளவிற்கு அதன் நிகர முதலீட்டு மதிப்பானது உயர்ந்துள்ளது.
இந்த குழுமத்தின் நிகர லாபம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத உச்சமாக சுமார் 348 பில்லியன் வெள்ளி ஆக பதிவானது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இது ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் துமாசிக் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஓராண்டு லாபம் 24 விழுக்காடு அதிகமாக உள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இது சுமார் 2.28 விழுக்காடுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. துமாசிக் நிறுவனத்தைப் பொறுத்தவரை இதன் முதலீட்டில் பாதிக்கும் மேற்பட்டவை சிங்கப்பூரார்கள் மற்றும் சீனாவையும் சேர்ந்தது.
இருப்பினும் புதிய முதலீடுகளில் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பங்கு அதிகம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.