TamilSaaga

டிராகன் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் – பிரதமர் லீ

2024 ஆம் ஆண்டு ட்ராகன் ஆண்டாக அறியப்படுகிறது. இந்த ஆண்டை சீனர்கள் மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக கருதுகிறார்கள். ஏனென்றால் சீனர்களின் மகிழ்ச்சியில், அதிர்ஷ்டத்தில், உழைப்பில், நம்பிக்கையில் டிராகன் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு சீன வருட பிறப்பு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி 2024 அன்று பிறக்கிறது

எல்லா ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் சிங்கப்பூரில் சீன வருடப்பிறப்பு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிங்கப்பூரின் பிரதமர் லீ ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும். உலக அளவில் பல சிக்கல்கள், பிரச்சனைகள் இருப்பினும் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

பிப்ரவரி மாதம் 9-ம் தேதி Ng Teng Fong General Hospital க்கு வருகை தந்த பிரதமர் லீ நிருபர்களுக்கு பேட்டியளித்ததாவது,

கடந்த 2023 ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவு வளர்ச்சியில்லை எனினும் நாம் வந்த நிலையில் இருந்து மீண்டு வந்தோம். இந்த ஆண்டு அதாவது 2024 நாம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். குறிப்பிட்ட சில துறைகளில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் நாட்டின் வருவாய் மற்றும் பணப்புழக்கம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1. 2% ஆனால் இந்த ஆண்டு அதாவது 2024 இல் பொருளாதார வளர்ச்சி 1 – 3 % அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம் சில்லறை மற்றும் உணவுத்துறைகளில் நிறைய திட்டங்கள் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த இந்த துறைகள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

உலக அளவில் நடக்கும் யுத்தங்களும், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை மேலும் சீனாவின் எலக்ட்ரானிக் துறையின் பாதிப்புகளும் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்காது .

அப்பொழுது பிரதமரிடம் நிருபர் சிங்கப்பூரின் பண வீக்கம் மற்றும் அதிக cost of living பற்றி கேட்டிருந்தார்.

அதற்கு திருலி திரு லீ அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிக பணவீக்கத்தை சந்தித்தோம் ஆனால் 2023 ஆம் ஆண்டு அது குறைய தொடங்கியது இப்பொழுது சரியாக 4 – 5 சதவீதம் மட்டுமே உள்ளது இந்த

புதிய வருடத்தில் இன்னும் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது இதனால் மக்களுக்கு ஆகும் தினசரி செலவுகள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

அது மட்டும் இன்றி அரசு  சராசரி  குடும்பத்தின் செலவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறது,  அதுமேலும் குறைய  முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  இந்த ஆண்டு அரசு  திருமணம் மற்றும்   குழந்தை பேரு  ஆகியவற்றிற்கு   உறுதுணையாக இருக்கும்.   அதற்குண்டான  திட்டங்கள்  வழி வகுக்கப்பட்டு இருக்கின்றன.

இதை ஊக்குவிக்கும் வகையில்  பள்ளிகளிலும்  குறிப்பாக  மழலையர் பள்ளிகளில்,  வேலையில் தளர்வுகள்,  மகப்பேறு விடுப்பு, குடும்ப விடுப்பு   ஆகியவற்றில்   புதிய திட்டங்களும் , தளர்வுகளும் அறிவிக்கப்படும்.   இது குறித்து DPM Lawrence – ம்  அவரோட அவரின்    குழுவும்  வேலை செய்து கொண்டிருக்கிறது.   நல்ல முடிவுகளை  அவரிடம் இருந்து    கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

நிருபர்களுடன் பேட்டியை முடித்த பின் பிரதமர் Ng Teng Fong General Hospital – ன் புதிய திட்டத்தை கேட்டறிந்தார்.

பிரதமர் அங்கு தனது மனைவி மற்றும் தொழிலாளர் நல தலைவர்களுடன் சென்று இருந்தார். அங்கு அவர் மருத்துவமனை தொழிலாளர்கள் உடன் சீன வருட பிறப்பை கொண்டாடினார். அப்பொழுது அவர் இது பிரதமராக என்னுடைய கடைசி சீன வருட பிறப்பாக இருக்கலாம். எல்லாம் நல்ல முறையில் சென்றால் பொறுப்புகளை துணை பிரதமர் Lawrence Wong – கிடம் பொறுப்புகளை 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்படைப்பேன் என்று கூறினார்.

மேலும் அவர் கோவிட் 19 தொற்றுநோய் காலங்களில் மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார் இதேபோன்று மருத்துவ ஊழியர்கள் தங்களது இன்றியமையாத சேவையை எப்பொழுதும் நாட்டிற்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்த மருத்துவமனையில் செவிலியர் Kennis Koh, 25 என்பவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரதமரை சந்தித்தார் அவர் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சீன வருட பிறப்புக்கு எந்த ஒரு வருடமும் விடுப்பு எடுக்காமல் அவருடைய வேலையை தொடர்ந்தார். அவர் அவருடைய குடும்பத்தாரும் அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதால் தான் இங்கு வருடப் பிறப்பன்றும் வேலை செய்ய முடிகிறது என்று கூறினார். இதை கேட்டு பிரதமர் லீ பெருமிதத்துடன் மருத்துவ சேவையில் பணிபுரிபவர்களை மனதார பாராட்டினார். மேலும் சிங்கப்பூரின் சுகாதாரத்துறை மேம்பட அவர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிப்பதால் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related posts