தற்போது சிங்கப்பூரில் இந்தியா உட்பட பிற வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு என்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குழுமத்தில் இருந்து அவர்களுக்கு தேவைப்படும் சட்ட ரீதியான உதவிகளை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சுமார் இருபது அமைப்புகளுடன் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச சட்ட ஆலோசனை சேவையை பிரிவும் இந்த குழுமத்தில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்தில் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் நீதி தொடர்பான சேவைகள் பற்றி ஆலோசனை வழங்கவும் இந்த குடும்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய குழுமம் கடந்த 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் கிருமி பரவல் காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து சிங்கப்பூர் சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றி ஆராயலாம்