TamilSaaga

Exclusive : “உழைச்ச காசுல சூதாட்டம் ஆடாதீங்க” – சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் கவனத்திற்கு

இந்த டிஜிட்டல் உலகில் டெக்னாலஜி பல மடங்கு வளரும் அதே நேரத்தில் வேலைவாய்ப்பிற்கு ஏற்படும் பஞ்சமும் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டு தான் வருகின்றது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்திட பல நாட்டு அரசுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறப்பான நாடுகளில் தங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைத்தும், அந்த வேலை மூலம் கிடைக்கும் பணத்தில் தங்களுடைய நிலையை உயர்திக்கொள்ளாமல் அந்த பணத்தை தேவை இன்றி செலவு செய்யும் வெகு சில இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சிங்கப்பூரை பொறுத்தவரை Remote Gambling Act (RGA) சட்டத்தில் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடலாம். அதேபோல கேசினோ கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், நீங்கள் சட்டபூர்வமாக சூதாட்ட விடுதிகளில் சூதாட்டம் செய்வதற்கு முன்பு உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சிங்கப்பூரில் சூதாட்ட விடுதிகளில் நுழைவதற்கு தங்கள் வயதை குறைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் 1,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆகையால் சிங்கப்பூரில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால் பிழைப்பிற்காக பிற நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பள பணத்தை முறையாக பயன்படுத்தாமல் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சம்பளம் கைக்கு வந்த அடுத்த நாளே அதை சூதாட்ட இடங்களுக்கு எடுத்துச்சென்று மாதம் முழுதும் பாடுபட்டு வாங்கிய சம்பளத்தை டாலர் பாக்கி இல்லாமல் வெகு சில நிமிடங்களில் செலவிடுகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஒன்றை நூறக்கலாம் என்ற நம்பிக்கையோடு செல்பவர்களுக்கு இறுதியில் வெறும் கையே மிஞ்சுகிறது.

பணத்தை பறிகொடுத்த பலர் அந்த விரக்தியில் தங்கள் உயிரை மாய்துகொண்ட சம்பவங்கள் சில நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இழப்பு என்னவோ இறந்தவர்களின் குடும்பத்திற்கு தான். ஆகையால் வெளிநாடுகளில் இருந்து கஷ்டப்பட்டு வந்த உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை தேவையின்றி செலவு செய்து இறுதியில் தவறான முடிவுக்கு செல்வத்திற்கு பதிலாக பயன்தரும் பல விஷயங்களை செய்யலாம்.

Related posts