TamilSaaga

‘சரியான உரிமம் இல்லாத மசாஜ் சென்டர்’ – 4 பெண்கள் உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சிங்கப்பூரில் மசாஜ் சென்டர்கள் சட்டம் மற்றும் பொது பொழுதுபோக்கு சட்டத்தின் கீழ் சாட்டப்பட்ட குற்றங்களுக்காக 31 முதல் 61 வயது வரையிலான நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று ஜூலை 23 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கடந்த மே 2021ல், 31 வயது நபர் ஒருவர் உரிமம் பெறாத கேடிவி விற்பனை நிலையத்தை இயக்கியதாக நம்பப்படுகிறது, மேலும் அந்த நிலையம் 15 நபர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த நிலையம் என்று இன்று (ஜூலை 23) வெளியான செய்தி குறிப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர் பொது பொழுதுபோக்கு சட்டம், மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2020 ஆகியவற்றின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளார் போலீசார் தெரிவித்தனர்.

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மதுபானம் விற்றது. சரியான உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்குகளை வழங்கியது ஆகிய குற்றங்களுக்காக அந்த நபருக்கு 20,000 டாலர் வரைஅபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related posts