இந்திய கிரிக்கேட் அணியின் முன்னால் விக்கட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கமெண்ட்ரி செய்யும் போது பேசிய கருத்து பெரிய சர்ச்சையையும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் வர்ணனையாளராக பேசத் துவங்கினார். அவருடைய குரல் மற்றும் பேச்சு எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்ததால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
தற்போது இங்கிலாந்து – இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தினேஷ் கார்த்திக் பேட்டை (Cricket Bat) வைத்து மனைவியை ஒப்பிட்டு பேசிய கருத்து தான் சர்ச்சைக்குள்ளானது.
” பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட் மட்டையை (Bat) போன்றவர்கள் இல்லை, அவர்கள் தங்கள் கைகளை நம்பி செல்கிறார்கள். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்கள் மட்டைகளை விரும்புவதில்லை. சிலர் அடுத்தவரின் மட்டையை விரும்புகிறார்கள்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் “கிரிக்கெட் Bat அடுத்த வீட்டுக்காரர் மனைவி போன்றது, அவர்கள் எப்போதும் அதையே விரும்புகிறார்கள்” “Bats Are Like Neighbour’s Wife, They Always Feel Better” என பாலியல் ரீதியாக பேசியால் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இணையத்தில் தினேஷ் கார்த்திக்கின் இந்த பேச்சிற்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.