1999 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிறுவப்பட்ட K.U.S நிறுவனம், கட்டுமானத் துறையில் நம்பகமான விநியோகஸ்தராகவும், ஒப்பந்த சேவை வழங்குநராகவும் இன்று திகழ்கிறது. ஆசியாவில் 6 நாடுகளில் பரவியுள்ள 16 நிறுவனங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500 ஊழியர்களைக் கொண்டு K.U.S இயங்கி வருகிறது.
சிங்கப்பூர் நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோது, கட்டுமானப் பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை K.U.S திறம்பட பூர்த்தி செய்தது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஒப்பந்த சேவைகள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் K.U.S வழங்குகிறது.
சிங்கப்பூர் மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற பிற ஆசிய நாடுகளிலும் தனது வணிக எல்லையை K.U.S விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:
Company Name | Post Name |
SG K.U.S Holdings (S) Pte Ltd | Procurement Executive
Logistics Coordinator HR Assistant / Executive Sr. Executive /Assistant Supply Chain Manager HR Assistant/Executive |
SG K.U.S Formwork & Scaffolding Pte. Ltd. | Sales Executive
Logistics Supervisor Logistics & Shipping Coordinator |
SG Exove Contracting Services Pte Ltd | Quantity Surveyor |
SG Calaba Pte Ltd | Indoor Sales Executive
Tele-Sales Executive |
K.U.S Singapore Shared Services | Procurement Executive |
https://kusgrp.com/all-careers/?search_text=&location=4&specificalization=
கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று, உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த வேலைக்கான பக்கம் திறக்கும். அப்பக்கத்தில், பணியின் தன்மை, வேலை செய்ய வேண்டிய இடம், சம்பளம், தேவையான திறன்கள், செய்ய வேண்டிய வேலைகள் போன்ற அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்து, உங்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று உறுதி செய்து கொள்ளவும்.
தங்களது சுயவிவரக் குறிப்பு Resume-ஐ hrservices@kus.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.