TamilSaaga

சிங்கப்பூரில் ST Logistics நிறுவனத்தில் Executive வாய்ப்பு அறிவிப்பு!

சிங்கப்பூரைச் சேர்ந்த ST Logistics நிறுவனம், பாதுகாப்பு, அரசு மற்றும் சுகாதாரத் துறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு முன்னணி நிறுவனம். இவர்கள் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, அதே சமயம் குறைவான செலவில் விநியோகம் செய்கின்றனர்.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் ST லாஜிஸ்டிக்ஸ், அவர்களின் தேவைகளை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, பொதுத்துறை மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு இப்பகுதியில் சிறந்த முறையில் விநியோகம் செய்கின்றனர்.

ST Logistics தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.

Post Name: Executive – Order Processing

Job Profile:

The Executive – Order Processing (Warehouse & Cold Chain Management) is responsible for preparing customer proposals and/or tender documents and fulfilling orders, from identifying customer needs, developing proposals, processing orders to shipment and delivery of orders to the customers. He/She is also responsible for managing customers and co-ordinating with colleagues during the entire process. Resourceful and analytical, he/she is required to analyse customer needs and convince customers to adopt proposals.

Eligibility:

  • SAP/Warehouse Management System (WMS) குறித்த அடிப்படை அறிவு அவசியம்.
  • Microsoft Office/Power Platform அப்ளிகேஷன்களில் நல்ல புலமை (Proficiency) தேவை.

கல்வித் தகுதியும் பணி அனுபவமும்:

  1. லாஜிஸ்டிக்ஸ் (Logistics) தொடர்பான துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
  2. இந்தத் துறையில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ST Logistics குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்வு செய்யவும். அங்கே பணியின் விவரங்கள், வேலை செய்ய வேண்டிய இடம், வேலையின் தன்மை மற்றும் பொறுப்புகள் போன்ற முழு தகவல்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்து, அனைத்தும் உங்களுக்குச் சரியாக இருந்தால், அதனருகில் உள்ள “Apply now” என்பதைக் கிளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்கள் CV-ஐ (சுயவிவரக் குறிப்பு) பதிவேற்றம் செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி போன்ற சுய விவரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பி, “Apply” என்பதைக் கொடுத்தால், உங்கள் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.

அல்லது, எளிமையாக, நேரடியாக “Apply Now” என்ற இணையதள முகவரிக்குச் சென்றும், உங்களுக்கான வேலை வாய்ப்பு விவரங்களைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

Related posts