GE Vernova Inc. என்பது ஆற்றல் உபகரண உற்பத்தி மற்றும் அதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். GE Vernova 2024 ஆம் ஆண்டு ஜெனரல் எலெக்ட்ரிக் (General Electric) நிறுவனத்தின் மின்உற்பத்தி பிரிவுகளான GE Power, GE Renewable Energy, மற்றும் GE Digital ஆகியவற்றின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை உருவாக்கி அதற்கான பராமரிப்பு சேவைகளையும் வழங்கும் சிறந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் Cambridge, Massachusetts-ல் அமைந்துள்ளது.
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இது 2024 ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டுள்ள GE Vernova Inc. நிறுவனத்தில் தற்பொழுது ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்புகள் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Post Name: Machinist
Job Description:
நீங்கள் அனைத்து வகையான இயந்திரங்களையும், உதாரணமாக CNC (மில்லிங், கிரைண்டிங், லேத்); எலக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜ் மெஷின் (EDM); சர்பேஸ் கிரைண்டிங்; VT லேத் மற்றும் பல்வேறு வழக்கமான இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களை அமைத்து இயக்க வேண்டியிருக்கும். மேலும், வெட்டுதல் (machining) பணிகளைச் செய்ய வேண்டும்.
Eligibility:
- குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி அல்லது என்டிசி (NTC) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி விரும்பத்தக்கது.
- நல்ல இயந்திரவியல் திறன் (Good mechanical aptitude) இருக்க வேண்டும். இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு அவசியம்.
- எழுத்து மற்றும் பேச்சு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ளவும் இது முக்கியம்.
- இயந்திரங்களை இயக்குவது குறித்த அறிவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட இயந்திரத்தைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்படலாம்.
- சுழற்சி முறையில் பணிபுரியும் திறன் இருக்க வேண்டும் (Able to perform rotating shift). வெவ்வேறு நேர ஷிப்டுகளில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.
பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.
எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” என்ற பொத்தானை அழுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.
சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்