BTS போல உலக அளவில் புகழ்பெற்ற ஒரு Band குழு தான் ஹாங் காங் நகரை சேர்ந்த Boyband Mirror என்ற இந்த குழு. இந்நிலையில் அந்த குழு பங்கேற்ற நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மேடையின் மேலே கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய டிவி போன்ற Display ஒன்று அறுந்து கீழே விழுந்ததில் மேடையில் இருந்த பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேடையில் perform செய்துகொண்டிருந்தது 2 டான்சர்கள் மற்றும் பார்வையாளர்களின் இருந்த மூன்று பெண்கள் இந்த விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முக்கிய நடன கலைஞரான Mo Lee Kai-yin இந்த விபத்தில் காயமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஹாங்காங் நாட்டில் வெளியாகும் தி ஸ்டாண்டர்ட் செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, லீக்கு பெருமூளையில் இரத்தப்போக்கு மற்றும் அவரது நான்காவது cervical vertebraeவில் முறிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
இந்த வகையில் அடிபடுவது ஒரு கார் விபத்து அல்லது உயரத்தில் இருந்து விழுதல் போன்ற கடுமையான காயங்களை ஏற்படுத்தும். அந்த நடனக் கலைஞருக்கு கடந்த ஜூலை 28 அன்று முதுகுத் தண்டு காயத்திற்காக அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று ஜூலை 29 அன்று எட்டு மணி நேரம் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டிஸ்ப்ளேவைத் தாங்கியிருந்த இரண்டு உலோக சஸ்பென்ஷன் வயர்களில் ஒன்று அறுந்து விழுந்ததைக் கண்டறிந்தது. மேலும் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.