TamilSaaga

“சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினர்” : எப்படி தங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிப்பது? – முழு விவரம்

சிங்கப்பூர் தற்போது உள்ள இந்த பெருந்தொற்றுடன் வாழ்வதற்கான மாற்றத்தைத் தொடர்வதால், சிங்கப்பூர் தனது எல்லைகளை பிற நாட்டு பயணிகளுக்காக மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இப்போது ஹோட்டலுக்குப் பதிலாக தங்களுடைய வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பை (SHN) வழங்கலாம். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படாத தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTLs) வழியாக சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

வரவிருக்கும் நாட்களில் மேலும் மூன்று VTL பயணப்பாதை திறக்கப்பட உள்ள நிலையில், தனிமைப்படுத்தல் இல்லாத ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழைவது பற்றி வெளிநாட்டு பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு…

VTL வழியாக சிங்கப்பூருக்கு யார் பயணம் செய்யலாம்?

நேற்று அக்டோபர் 28 நிலவரப்படி, சிங்கப்பூர் அரசு 13 நாடுகளுடன் VTL திட்டத்தை அறிவித்துள்ளது. பிரத்யேக விமானங்கள் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு தடுப்பூசியை முழுமையாகபெற்றிருக்க வேண்டும். பொருந்தினால், அந்த தடுப்பூசிக்கான குறைந்தபட்ச டோஸ் இடைவெளி காலத்தையும் அவர்கள் முடித்திருக்க வேண்டும்.

மேலும் தடுப்பூசி போடப்படாத 12 வயது மற்றும் அதற்கும் குறைவான குழந்தைகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணியுடன் இருக்கும் பட்சத்தில் VTL வழியாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள்.

எனது தடுப்பூசி நிலையை நான் எப்படி நிரூபிப்பது?

சிங்கப்பூரில், குடியிருப்பாளர்கள் தங்களின் தடுப்பூசி நிலையை நிரூபிக்க TraceTogether அல்லது HealthHub ஆப்ஸைப் பயன்படுத்துகின்றனர், எனவே பார்வையாளர்கள் தங்களின் தடுப்பூசி பதிவுகளை அந்த செயலிகளில் பிரதிபலிப்பது முக்கியம்.

அதைச் செய்ய, பயணிகள் தங்கள் தடுப்பூசிக்கான ஆதாரத்தை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரியிடம் குடிவரவு அனுமதியின் போது சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம், தடுப்பூசியின் வகை மற்றும் எடுக்கப்பட்ட தேதிகளை தெளிவாகக் குறிப்பிடும் அசல் தடுப்பூசி ஆவணத்தின், வடிவத்தில் அளிக்க வேண்டும். ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அல்லது மொழிபெயர்ப்பு சேவை வழங்குநர், தூதரகம் அல்லது நோட்டரி மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.

Related posts