சிங்கப்பூரில் நேற்று (மார்ச் 31) இரவு 11.59 மணி முதல் தடுப்பூசி போடப்பட்ட பயணக் கட்டமைப்பின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு, அவர்களின் ட்ரேஸ் டுகெதர் செயலியில் தடுப்பூசியின் status 30 நாட்களுக்கு முழுமையாகப் பிரதிபலிக்கும் என்று MOH அறிவித்துள்ளது.
vaccination-differentiated safe management measures (VDS) எனும் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உட்பட்ட வளாகங்களுக்குள் நுழைவதற்கு இது அவர்களுக்கு உதவுகிறது என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூரில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பவர்கள், தேசிய நோய்த்தடுப்புப் பதிவேட்டில் தங்கள் vaccination records-களைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் தடுப்பூசிக்கான சிங்கப்பூரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் டோஸ்களைப் பெற வேண்டியிருக்கும் என்று MOH கூறியுள்ளது.
சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்படாத மற்றும் பதிவேட்டில் அவர்களின் records பிரதிபலிக்காத பயணிகளுக்கும் இது பொருந்தும்.
12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பயணிகளுக்கு இந்தத் தேவை பொருந்தாது, ஏனெனில் அத்தகைய குழந்தைகள் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் மற்ற இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக, தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு ட்ரேஸ் டுகெதரில் 180 நாட்கள் தற்காலிக தடுப்பூசி அந்தஸ்து வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழைக் கொண்ட குறுகிய கால பாஸ் வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்கு ட்ரேஸ் டுகெதரில் தடுப்பூசி போட்டதாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், அத்தகைய சான்றிதழ் இல்லாதவர்கள், 30 நாட்களுக்கு மேல் ட்ரேஸ் டுகெதரில் தடுப்பூசி போட்டதாக அங்கீகரிக்க செரோலஜி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இன்று (ஏப்ரல்.1) முதல் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அனைவரும் entry approval இல்லாமல் pre departure test மட்டும் கொண்டு சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்ற தளர்வு அமலாகியுள்ள நிலையில், சிங்கப்பூர் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.