கேம்பஸ் இன்டெர்வியூ என்று அழைக்கப்படும் நிகழ்வுகள் தற்போது உலக அளவில் பல கல்லுரிகளில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அண்டை நாடானாக இந்தியாவில் இருந்து வவுசி கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கத்துடன் சிங்கப்பூரைச் சேர்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துடன் தற்பொழுது தூத்துக்குடியைச் சேர்ந்த VOC கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலத்தியல் (geology) துறையில் பயின்ற மாணவர்களான முகமது இம்ரான் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் போஸ்டோ பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தில் பணி அமர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு மாணவர்களுக்கான பணி நியமனங்களும் அந்த மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் ஜெ. வீரபாகு வழங்கினார். இந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு உறுப்பினர்கள், நிலத்தியல் துறைத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.