TamilSaaga

குழந்தைகளை பிரிந்து வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – சிங்கப்பூர் “குட்டி சாண்டா” கொடுத்த “Surprise”

கிறிஸ்து பிறப்பு விழா என்பது உலக அளவில் உள்ள பல கோடி கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அன்பை பரிமாறும் ஒரு அற்புத நாளாகத் தான் கிறிஸ்துமஸ் பெருவிழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் இது போன்ற விஷேச நாட்களில் கூட தங்களுடைய சொந்த பந்தங்களுடன் சேரமுடியாமல். தனிமையில் தங்கள் நேரத்தை கழிக்கின்றனர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இந்நிலையில் அவர்களுக்கு பரிசுகள் அளித்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் ஒரு குட்டி கிறிஸ்துமஸ் தாத்தா.

இதையும் படியுங்கள் : மகனுக்காக 30 மணி நேரம் வலியை தாங்கிய “அற்புத தந்தை”

ஆறு வயது மட்டுமே நிரம்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆதிவ் சேத், கடந்த டிசம்பர் 25 அன்று தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது, சிங்கப்பூரில் உள்ள ​​புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட சமூகத்தினரிடையே பண்டிகை மகிழ்ச்சியைப் ஊற்றெடுக்க வைத்துள்ளார். அவர் தனது பெற்றோருடன், ரெட்ஹில் பகுதியில் பரிசுகள் அடங்கிய குட்டி பைகளை விநியோகிக்கச் சென்றார். பரிசுகளை வழங்கும்போது அவர் சாண்டா கிளாஸ் ஆடைகளை அணிந்திருந்தார்.

மதர்ஷிப் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவரது தாயார் அகன்க்ஷா, வேறு நாட்டில் தங்களுடைய வேலை பொறுப்புகள் மற்றும் கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் தங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்மஸைக் கொண்டாட முடியவில்லை என்பதை அறிந்து ஆதிவ் மனம் உடைந்துபோனதாக பகிர்ந்து கொண்டார். ஒரு வீடியோ கிளிப்பில், ஆதிவ் இந்த மக்களின் குழந்தைகள் தங்கள் சொந்த நாட்டில் இருக்கக்கூடும் என்பதால் இதைச் செய்ய விரும்புவதாகவும், அவர்களின் குழந்தைகளின் சார்பாக அவர்களுக்கு பரிசு வழங்க விரும்புவதாகவும் விளக்குகிறார்.

மேலும் சென்ற ஆண்டும் இதேபோல செய்ததாகவும், இந்த செயல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த குட்டி சாண்டா கூறுகின்றார். பெற்றோர்களாகிய அவர்கள், தங்களுடைய குழந்தை தன்னையும் தனது நண்பர்களையும் மட்டும் நேசிக்காமல் அனைத்து மனிதர்களையும் நேசிக்கும் உள்ளம் இதுபோன்ற செயல்களால் உந்துவிக்கப்படும் என்று நம்புவதாக அவருடைய தாய் கூறினார். மேலும் இந்த பெரிய உள்ளம் படைத்த குட்டி நெஞ்சம் கடந்த ஆண்டு, தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட, 50 நாட்களில் 100 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி, சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கத்திற்கு (SAVH) S$500 நிதி திரட்ட உதவியுள்ளன. “குட்டி தம்பி நீ உண்மையிலேயே Great…”

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts