TamilSaaga

சிங்கப்பூரில் சிறிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – கணிக்கும் வல்லுநர்கள்

வரும் காலங்களில் சிங்கப்பூரில் சிறிய மற்றும் குறுகிய காலக்குத்தகை உடைய வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகையின் மாற்றத்திற்கு ஏற்றார் போல வரும் காலங்களில் வீட்டமைப்பின் தேவையும் மாறும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் அடிப்படையில், குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அந்த குடும்பத்தில் அதாவது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு 1.15 மில்லியன் குடும்பம் என்ற அளவு தற்போது 1.37ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி ஒரு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே குடியிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 16 விழுக்காடாக இருந்தது. அதேபோல ஒரு வீட்டுக்கு இருவர் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கை 22.6ஆக இருந்தது. தற்போது கடந்த 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் வரும் காலங்களில் சிங்கப்பூரில் சிறிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts