TamilSaaga

இதுதான் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபின் “உயர்ந்த உள்ளம்” – மரண தண்டனை கைதிகளுக்கு சிறிது காலம் “சுவாசிக்க” மீண்டும் வாய்ப்பு

சிங்கப்பூரில் முன்னதாக கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 16) தூக்கிலிடப்படவிருந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, நமது ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் சில காலம் அவகாசம் அளித்து, அவர்களின் மரணதண்டனையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். 2010ம் ஆண்டு தண்டனை பெற்ற 51 வயதான சிங்கப்பூரர் ரோஸ்லான் பாக்கர், மற்றும் 37 வயதுடைய மலேசியர் பௌசி ஜெஃப்ரிடின் ஆகியோரின் வழக்கறிஞர்கள், இரு முறை நீதிமன்றத்தில் இவர்களுடைய மரணதண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தபோது அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தற்காப்புக்காக சுட்டுப்பிடித்தோம்” : போலீசாரை தாக்க வந்த நபர் – களேபரமான சிங்கப்பூர் சாலை, பரபரப்பை ஏற்படுத்திய Video

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த அவகாசம் அரசியலமைப்பின் 22 பி(1) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313 (எச்) ஆகியவற்றின் கீழ் அளிக்கப்பட்டது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்பிரிவு 22P(1) கூறுவது என்ன?

அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில், தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும் குடியரசுத் தலைவர் காலவரையின்றியோ அல்லது அவர் (குடியரசுத் தலைவர்) பொருத்தமானதாக கருதும் காலத்திற்கோ, விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்கலாம் என்பதாகும்.

அதேபோல சட்டப்பிரிவு 313(h)ன்படி, மரண தண்டனைக்கான நீதிமன்றத்தின் வாரண்ட் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, அந்த வாரண்டை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் அளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிடலாம், அதன்பிறகு அதை நிறைவேற்றுவதற்கு வேறு நேரத்தையோ அல்லது வேறு இடத்தையோ அவர் நியமிக்கலாம் என்பதாகும். அதே நேரத்தில் ஜனாதிபதி ஹலிமா வழங்கிய இந்த அவகாசம் மன்னிப்புக்கு சமமாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் “காதல்” எனும் பெயரில் நடக்கும் “காமக்களியாட்டம்”.. இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் இந்திய தொழிலாளர்கள்

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 14, 2008 அன்று ரோஸ்லான் மற்றும் பௌசி மீது 96.07 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 22, 2010 அன்று, 15 நாள் விசாரணைக்குப் பிறகு, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக, அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts