TamilSaaga

சிங்கப்பூர் TOTO வின்னர்… தட்டி சென்ற 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை… எங்கு வாங்கப்பட்டது இந்த டிக்கெட்.. செம லக்குல!

TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.

TOTO மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் Singapore Pools அமைப்பை நடத்தி வரும் சிங்கப்பூர் டோட்டலைசர் போர்டுக்கு செல்கிறது. இந்த தொகை முழுவதும் தொண்டு பணிகள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

TOTO வரலாறு :

1960களில் சிங்கப்பூரில் பெருமளவிற்கு பரவி இருந்த சட்ட விரோத சூதாட்டங்களை கட்டுப்படுத்தவதற்காக 1968 ம் ஆண்டு TOTO ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1981 ல் இது கணினி மயத்திற்கு மாற்றப்பட்டது. பல விதமான ஆன்லைன் விளையாட்டுக்களை இது அறிமுகம் செய்தது. தற்போதுள்ள TOTO ஆன்லைன் முறை 2016ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் குலுக்கல் (17-03-2025) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Toto Draw லாட்டரியில் $3,172,134 டாலர் (20 கோடி ) பரிசை வென்றுள்ளார். குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

Group -1 Winning Numbers:

 

7 30 39 42 43 48

சிங்கப்பூரில் Work Permit, S-Pass-ல்  வேலை பார்ப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு!!  சம்பள உயர்வு, புதிய Quotaகள்….MOM சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன?

Group 1 winning tickets sold at:

Soh Choo Trading – Block 19 Marsiling Lane #01-303 ( 1 QuickPick Ordinary Entry )

இதையடுத்து, இந்த வாரத்தின் குலுக்கல் வரும் 20-03-2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $1,000,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.

www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts