சிங்கப்பூரின் ஆல்கஹால் சில்லறை விற்பனையாளரான “Cellarbration” நிறுவனம். சிங்கப்பூரின் முதல் ஆல்கஹால் விற்பனை இயந்திரத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வயது குறைந்தவர்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தாமல் இருக்க இது சிங்க்பாஸைப் பயன்படுத்தி வயதை சரிபார்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விற்பனை இயந்திரம் சிங்கப்பூரின் Down Town ஈஸ்ட் ஸ்டோரில் அமைந்துள்ளது. மற்றும் சட்டபூர்வமாக குடிக்கும் வயதுடைய வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்காமல் மதுபானங்களை வாங்க இந்த இயந்திரம் வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை 18வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆல்கஹால் உட்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள சிங்க்பாஸ் மூலம் செயல்படுத்தப்பட்ட விற்பனை இயந்திரங்கள் மற்ற இடங்கள் மற்றும் “Cellarbration” நிறுவன விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைதூரத்தில் நிர்வகிக்கப்படும் விற்பனை இயந்திரங்களை வழங்க, ஃபின்டெக் மற்றும் AI தொழில்நுட்ப நிறுவனமான ஆரேசிஸ் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வழங்குநர் NETS ஆகியவற்றுடன் சேர்ந்து Cellarbration இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. ஆல்கஹால் விற்பனை இயந்திரம் சிங்பாஸ் ஸ்கேனிங் மற்றும் Contactless Payment மூலம் வாடிக்கையாளர்களின் வயதை சரிபார்த்தவுடன் பேக்கேஜ் செய்யப்பட்ட ஆல்கஹால் தயாரிப்புகளை வழங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி அட்டைகள், சேமித்த மதிப்பு அட்டைகள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.