TamilSaaga

“சிங்கப்பூரின் Sentosa தீவு, அடுத்த ஆண்டுவரை நீடிக்கப்பட்ட சலுகை” – முழு விவரம்

சிங்கப்பூரின் செண்டோசா அதன் இலவச நுழைவு விளம்பரத்தை வரும் மார்ச் 31, 2022 வரை நீட்டிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, பார்வையாளர்களுக்கு செப்டம்பர் 30, 2021 வரை தீவில் இலவச நுழைவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்கள் செண்டோசாவில் பின்வரும் முறைகள் வழியாக இலவசமாக நுழையலாம்:

சென்டோசா எக்ஸ்பிரஸ்

EZ- இணைப்பு அட்டைகள் கொண்ட விருந்தினர்கள், தங்கள் அட்டையை காண்பிப்பதன் மூலம் இலவசமாக உள்ளே நுழையலாம். EZ- இணைப்பு அட்டைகள் இல்லாத விருந்தினர்கள் ஒரு சேவை மைய அதிகாரியை அணுகி இலவச நுழைவு குறித்து கோரலாம். “சென்டோசா எக்ஸ்பிரஸ் தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை இயக்கப்படும் என்பதை நினைவில் கொள்க” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் மூலம் வருபவர்கள்

உள்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட IU கொண்ட அனைத்து வாகனங்களும் இலவசமாக உள் நுழையலாம். மேலும் உள்நாட்டில் பதிவு செய்யப்படாத IU கொண்ட வாகனங்கள் இலவசமாக உள்ளே நுழைவதற்கு சாவடியில் உள்ள கார்டு ரீடரில் ஆட்டோபாஸ் கார்டை காட்டுவதன் மூலம் அல்லது செருகுவதன் மூலம் உள்நுழையலாம். அதேநேரம் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

சைக்கிள் அல்லது நடைபாதையாக வருபவர்கள்

தீவின் சாதாரண சேர்க்கை விதிகளின் ஒரு பகுதியாக, பார்வையாளர்கள் சென்டோசாவுக்கு இலவசமாக நடந்து செல்லலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யலாம்.

Related posts