TamilSaaga

சிராங்கூன் சாலையில் மேலாண்மை நடவடிக்கை… தீபாவளி கூட்டத்தை குறைக்க ஏற்பாடு – முழு விவரம்

சிங்கப்பூரில் தீபாவளி நெருங்குவதையொட்டி சிராங்கூன் சாலை சந்திப்பில் உள்ள பாதசாரிகள் கடக்கும் சாலையில் கடக்கும் பகுதியானது மூடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது சாலைகளில் ஒரே இடத்தில் அதிக அடர்த்தியில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வண்ணம் இந்த மேலாண்மை நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சிராங்கூன் சாலை மற்றும் கேம்பல் லேன் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதியை நேற்று அக்டோபர் 29 முதல் அக்டோபர் 32 வரை மூடப்பட்டுள்ளது.

அதே போல தீபாவளிக்கு முந்தை நாளான நவம்பர் 3 மாலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை மூடப்படும் என சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்துள்ளது.

இந்த மூடப்பட்ட சாலைக்கு பதிலாக மக்கள் அனைவரும் சுங்கை சாலை மற்றும் டன்லப் சாலையிலும் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடங்களுக்கு திருப்பிவிடப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகாமல் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக வாடிக்கையாளர்கள் அதிகம் வரக்கூடும் என்பதால் கடைகளில் கூட்டத்தை குறைக்க அதிக நேரம் திறந்திருக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Related posts