TamilSaaga

சிங்கப்பூர் Bukit Timah பகுதி.. “ராட்சச பல்லியை அப்படியே விழுங்கிய ராஜ நாகம்” – இது மிகவும் அரிது என்று கூறும் புகைப்பட கலைஞர்!

உலக அளவில் மிகக்கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் ராஜ நாகமும் ஒன்று, அதன் பிரமாண்டமான தோற்றமே நம்மை நிலைகுலைவைக்கும் என்றால் அது மிகையல்ல. பொதுவாக சிறிய ரக மலைப்பாம்பு முதல் நீர்ப்பாம்பு வரை ராஜநாகம் பலவற்றை உணவாக உட்கொள்ளும்.

ஆனால் கடந்த ஏப்ரல் 30 அன்று, சிங்கப்பூரில் உள்ள ஒரு புகைப்படக் கலைஞர், கம்பீரமான ராஜ நாகப்பாம்பு தனக்கு நிகரான பலம் கொண்ட ஒரு ராட்சச பல்லியை முழுவதுமாக விழுங்கும் கட்சியை படம்பிடித்துள்ளார். உண்மையில் இதுபோன்ற கடுமையான உணவுகளை ராஜநாகம் உண்பது மிக அரிது.

டேவிட் வைரவன் என்ற அந்த கலைஞர் சிங்கப்பூரின் புக்கிட் திமாவுக்கு அருகிலுள்ள ஹிந்தேட் இயற்கை பூங்காவில் இந்த அறிய நிகழ்வை பதிவு செய்துள்ளார். மதர்ஷிப்பிடம் பேசிய வைரவன், பிற்பகல் 3 மணியளவில், தான் அந்தப் பகுதியில் இருந்ததாகக் கூறினார்.

பல்லியை விழுங்கும் ராஜ நாகம்Video Courtesy Singapore Geographic

அப்போது தான் அந்த அருமையான கட்சியை அவர் படம் பிடித்துள்ளார், பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் சிலர் ராஜ நாகம் ஒன்றை பார்த்ததாக கூறியதையடுத்து, அந்தப் பகுதியில் பார்க்க ஆர்வமாக ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டுள்ளார்.

வைரவனின் கூற்றுப்படி, அவர் அங்கு சென்றபோது, ஏற்கனவே அந்த ராஜ நாகம் அதன் தாடையில் தான் அந்த ராட்சச பல்லி இருந்துள்ளது. வைரவன், அந்த பாம்பு தனது இரையை முழிவதுமாக விழுங்கும் வரை காத்திருந்து மெய்சிலிர்க்கும் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.

சிங்கப்பூரரை தாக்கி 2,30,000 வெள்ளி கொள்ளை? புகார் அளிக்க சென்றவரையே கைது செய்த போலீஸ் – CCTV மூலம் அம்பலமான உண்மை!

சுமார் 2 மணி நேரம் கழித்து தனது இரையை முழுவதுமாக அந்த ராஜ நாகம் விழுங்கி முடிதடித்து. உண்மையில் தனக்கு நிகராக இரையை வேட்டையாடி அந்த பாம்பு உண்ட காட்சிகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றது என்று தான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts