TamilSaaga

JUST IN : “சிங்கப்பூர் வர நினைக்கும் இந்தியர்களே Alert”.. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்க அதிக நேரம் எடுக்கும் – ICA திட்டவட்டம்

சிங்கப்பூரில் எல்லைக் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தளர்த்தப்படுவதால், அதிக அளவிலான மக்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தங்கள் பாஸ்ப்போர்ட்களை புதுப்பிக்க குவிந்தவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்க அதிக நேரம் எடுக்கும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அமலானது தளர்வுகள்.. உண்மையில் Mask போடாமல் எல்லா இடங்களுக்கும் போக முடியுமா? வெளியில் செல்லும் முன் இதை கொஞ்சம் படியுங்கள்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இந்தியா உள்பட பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகும் நிலையில் இருந்தால் நீங்கள் அதை புதுப்பிக்க நிச்சயம் வழக்கத்தை இப்பொது விட கூடுதல் காலம் ஆகும் என்பது தான் ICA தரும் தகவல்.

இதுகுறித்து ICA தெரிவித்தது, “தற்போது, ​​தினசரி பெறப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெருந்தொற்றுக்கு முந்தைய தினசரி சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது,” என்று ICA செய்தித் தொடர்பாளர் கூறினார். உதாரணமாக தொற்றுநோய்க்கு முன் தினசரி 2,000 விண்ணப்பகள் பெற்ற நிலையில் தற்போது தினமும் சுமார் 6,000 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்று அவர் கூறினார்.

எல்லை கட்டுப்பாடுகள் மிகவும் கடினமாக இருந்த காலகட்டத்தில் சுமார் ஒரு மில்லியன் கடவுசீட்டுகள் காலாவதியாகியதே இந்த அளவிற்கு அதிக அளவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு காரணம் என்றும் ICA தெரிவித்துள்ளது. ஆகையால் சிங்கப்பூருக்குள் மீண்டும் வர நினைக்கும் சிங்கப்பூரர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் ஆணையம் Alert செய்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் பயணத் திட்டங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் மற்றும் தங்கள் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க வேண்டியவர்கள் தங்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு ICA மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்பத்தை www.ica.gov.sg மூலம் ஆன்லைனில் செய்யலாம்.

இது மிகப்பெரிய Twist.. “சட்டென்று இந்தியாவில் சேவைகளை நிறுத்தியது சிங்கப்பூரின் Shopee” – இந்திய பணியாளர்களின் கதி என்ன?

தங்களுடைய கடவுச்சீட்டுகள் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தயாரானதும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும். அப்போது அவர்கள் சிங்கப்பூரில் உள்ள 27 தபால் நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் கூடுதல் வசூலிப்புக் கட்டணத்தைச் செலுத்தாமல் அவற்றைப் பெற முடியும். “சிங்கப்பூர் பாஸ்போர்ட் ஒரு கட்டாய அடையாள ஆவணம் அல்ல என்பதால், காலாவதியான பாஸ்போர்ட்களை புதுப்பிக்காததற்கு அபராதம் இல்லை” என்றும் ICA தெரிவித்துள்ளது.


“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts