TamilSaaga

சாகும் வயதா இது? சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பறிபோன மணிமாறன் உயிர்… அதிர்ச்சியில் இருந்து மீளா நண்பர்கள்!

சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 33 வயதான மணிமாறன் மாரடைப்பால் இறந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவரை கலகலப்பாக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மணிமாறன் திடீரென்று ஓய்வு வேண்டுமென்று ஓரிடத்தில் உட்கார்ந்துள்ளார்.

சில நிமிடங்கள் ஆகியும் அவர் அசைவற்று இருப்பதை உணர்ந்த நண்பர்கள் அவரை தட்டிப் பார்த்த பொழுது எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருந்துள்ளார். எனவே, விரைவாக நண்பர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பொழுது டாக்டர் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை கூறியுள்ளனர்.

நண்பர்கள் முன்னிலையில் பேசி சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த மணிமாறன் திடீரென்று இறந்த சம்பவத்தை நண்பர்களால் இதுவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது தங்கை காயத்ரி கூறும் பொழுதுஅவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாக கூறினார். ஒருவேளை இதனால் கூட மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனினும், உணவு விஷயத்திலும், மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதிலும் மணிமாறன் கட்டுப்பாடை கடைபிடிப்பவர் என்று அவரது தங்கை கூறினார். மேலும் மருத்துவ பரிசோதனைகளையும் தவறாமல் செய்பவர் என்று கூறினார்.

புதிதாக அலுவலகத்திற்கு மாறி ஒரு வருடமே ஆன நிலையில், அலுவலக நண்பர்களிடையே நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கின்றார் மணிமாறன். அது மட்டுமல்லாமல் பணியிலும் நன்கு திறமையானவர் என்று பெயர் எடுத்து இருக்கின்றார். சிங்கப்பூரில் உள்ள தெம்பனிஷ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோர்கள், தங்கையுடன் வசித்து வரும் இவர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். மணிமாறனின் மூத்த தங்கைக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்த சம்பவம் அவர் குடும்பத்தினர் இடையே தீராத காயமாக மாறி உள்ளது.

விளையாட்டில் மட்டும் ஆர்வம் காட்டாமல் சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் உறுப்பினராகவும் கடந்த 11 ஆண்டு காலமாக செயலாற்றி வரும் இவர் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர் ஆவார். இந்நிலையில் நாட்டின் மீது அவர் பற்று வைத்திருந்தார் என்று சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பால் தம்பையா அவருக்கு புகழாரம் சூட்டி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். மணிமாறன் அதை இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு அவரது இறுதி அஞ்சலியை நன்முறையில் நடத்திக் கொடுத்தனர்.

Related posts