TamilSaaga

சிங்கப்பூரில் வேலை பிடிக்காமல் செய்யும் நபரா நீங்க… Resign செய்ய ஐடியாவில் இருக்கீங்களா? இதை follow பண்ணுங்க ஒரு பிரச்னையும் இல்லாமல் சட்டுனு வெளியேறலாம்

சிங்கப்பூரில் பிடித்து வேலைக்கு வந்தவர்களை போல சிலர் பிடிக்காமலும் வேலைக்கு வந்து குடும்பத்துக்காக வேலை செய்து தான் வருகிறார்கள். இதில் ஒரு சிலர் பிடிக்காத கம்பெனியை விட்டு வெளியேறலாமா என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அதில் எதுவும் சிக்கல் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே கஷ்டத்தில் வேலை சென்று வரும் நபர் நீங்களாக இருந்தால் இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்க.

சிங்கப்பூரில் வேலை பார்க்க எக்கசக்கமாக ஊழியர்கள் வெளிநாட்டில் இருந்து வருபவதற்கு காரணம் இங்கு இருக்கும் கட்டுபாடுகள் தான். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் சரியான அணுகுமுறையை தான் வகுத்து இருக்கிறது. அதனால் முதலில் இங்கு சட்ட சிக்கலால் நீங்க தவிக்கவே தேவை இருக்காது.

இதையும் படிங்க: இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை தான்… பிடிவாதம் பிடிக்கும் சிங்கப்பூர்… மறுக்கும் உலக நாடுகள்… சிங்கை இதில் strictஆ இருப்பதற்கு காரணம் என்ன?

ஏஜென்ட்டை பிடித்து சிங்கப்பூர் வேலைக்கு வந்தாகி விட்டது வேலை பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென வேலை பிடிக்கவில்லை. இல்லை வேறு கம்பெனிக்கு மாற இருக்கிறீர்கள் என்றால் அதற்கு முதலில் resign செய்ய வேண்டும் என்பதை முறையாக ஹெச்.ஆரிடம் அறிவித்து விடுங்கள்.

கம்பெனிக்கும் உங்களுக்குமான வேலைக்கான ஒப்பந்தம் மூன்று வழிகளில் முடிக்கப்படலாம். நீங்கள் Resign செய்யும் போது, உங்க கம்பெனி உங்களை வேலையில் இருந்து நிறுத்தும் போது அல்லது உங்களுக்கான காண்ட்ராக்ட் முடிவுக்கு வரும் போது. அதனால் நீங்க resign செய்கிறேன் எனச் சொல்லும் போது உங்க கம்பெனி நிர்வாகம் உங்களின் வேண்டுக்கோளை நிராகரிக்க கூடாது.

முறையாக நீங்கள் notice காலம் முடித்துவிட்டோ அல்லது இழப்பீடு தொகையை கட்டி உடனடியாகவோ வேலையில் இருந்து வெளியேற முடியும். இதை முதலாளிகள் தடுத்தால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. முதலில் Resign செய்ய இருப்பதை உங்களின் வேலைக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையை கொண்டு கடிதமாக எழுதி ஹெச் ஆரிடம் கொடுத்து விடுங்கள். உங்களின் வருட கணக்கினை நோட்டீஸ் காலத்தில் கழித்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் ஊழியரா நீங்க… குடும்பத்துடன் தங்க ஆசையா? Dependent விசா எடுக்கலாம்… மிஸ்ஸாகும் பட்சத்தில் இதை கூட Follow பண்ணுங்க

அப்படி முறையாக கடிதம் கொடுக்காமல் notice காலத்தினை முடிக்காமல் வெளியேற விரும்பினால் கம்பெனிக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

இதில் நீங்கள் வேலையை சரியாக செய்தும் உங்களின் கம்பெனி திடீரென நடத்தையை காரணம் காட்டி உங்களை வேலையில் இருந்து நீக்கினால் https://www.tal.sg/tadm/know-your-options இந்த லிங்கில் சென்று அதற்கு புகார் அளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts