சேலம் : முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 மாத குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து தேவை; தமிழக அரசு உதவ வேண்டுமென பெற்றோர் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை.
சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி, ஜெயந்தி தம்பதியினருக்கு 9 மாதமே ஆன ஸ்ரீஷா என்கிற பெண் குழந்தை உள்ளது. பூபதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நான்கு முதல் ஐந்து மாதத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சி ஏதும் ஸ்ரீஷாவிற்கு இல்லாததால் குழந்தையின் பெற்றோர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் ( SMA TYPE 1) இருப்பது தெரியவந்துள்ளது.
ரூ.16 கோடி மருந்து: இதையடுத்து குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்களால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு தங்களது குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 9 மாதமே ஆன தங்களது குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து உடனடியாக கிடைக்க தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு ஆவணம் செய்யுமாறு குழந்தையின் தாய் ஜெயந்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தையின் தாய் பேட்டி உள்ளது.
குழந்தையை காப்பாற்ற 16 கோடி மதிப்பிலான மருந்து தேவை.. கண்ணீர் விட்டு கதறும் தாய் – சேலத்தில் சோகம் pic.twitter.com/fDucYjQkIa
— Tamil SaaGa Singapore (@SaagaTamil) September 27, 2021
— Tamil SaaGa Singapore (@SaagaTamil) September 27, 2021