சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் ஆள் பற்றாக்குறை காரணமாக சிங்கப்பூர் பேருந்து நிறுவனமான Go Ahead Singapore வரும் புதன்கிழமை (செப்டம்பர் 15) முதல் ஐந்து பேருந்து சேவைகளை நிறுத்தி வைக்கவுள்ளது. மேலும் இந்த சேவை ரத்து தற்காலிகமானது என்றும், எக்ஸ்பிரஸ் மற்றும் நகர நேரடி சேவைகள் தான் நிறுத்தப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட முகநூல் பதிவில் எக்ஸ்பிரஸ் சேவைகள் எண் 12e, 43e மற்றும் 518, மற்றும் நகர நேரடி சேவைகள் எண் 661 மற்றும் 666 ஆகியவை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. இந்த பெருந்தொற்று சூழலில் ஆட்கள் பற்றாக்குறையால் இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் Go Ahead Singapore நிறுவனத்தின் டிரங்க் பஸ் சேவைகள் 12 மற்றும் 43 தொடர்ந்து செயல்படும் என்று கூறியது. Go Ahead Singapore LTA-வின் ஐந்து விரைவு மற்றும் நகர நேரடி பேருந்து சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும் இந்த சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மற்ற பேருந்து சேவைகள் அல்லது MRTஐப் பயன்படுத்தி தங்கள் இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
LTA மற்றும் பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திவருகின்றது.