TamilSaaga
Singapore Jail

பச்சிளம் மகள்.. கொடூரமாக கொன்ற தந்தை – சிங்கை அரசு கொடுத்த தண்டனை என்ன?

சிங்கப்பூரில் தனது 5 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தையின் மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட 35 ஆண்டு சிறைத்தண்டனையைக் குறைக்கக் கோரிய அந்த நபர் மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கொடூரம்

பாதிக்கப்பட்ட 5 வயது குழந்தையான ஆயிஷா, கடந்த 2017ம் ஆண்டு, அவரும் அவரது சகோதரனும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். அந்த பிஞ்சு குழந்தையின் தந்தை பலமுறை அவரை கழிவறை தொட்டியில் பலமாக அடித்ததை அடுத்து, தலையில் ஏற்பட்ட காயத்தால் அந்த குழந்தை இறந்தது தெரியவந்தது.

அந்த பிஞ்சு குழந்தை மரணிப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். அதில் அவருக்கு போதுமான அளவு உணவு கொடுக்காதது, கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழிப்பறையில் நிர்வாணமாக வைக்கப்பட்டது ஆகியவை அடங்கும் என்பதே கொடுமையின் உச்சம்.

8 ஆண்டுகள் நடந்த வழக்கு

இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை குற்றவாளி ஒப்புக்கொண்டார். சாட்சியங்களை அழித்தல், குழந்தை மீதான தாக்குதல் மற்றும் கொலை உள்ளிட்டவை அதில் அடங்கும். மேலும் காவல்துறை அதிகாரிகளிடம் பொய் சொன்னது ஆகிய 20 குற்றச்சாட்டுகள் அந்த நபரின் தண்டனையில் பரிசீலிக்கப்பட்டன.

ஆண்டுக்கு 1000 புதிய ஆசிரியர்கள் நியமனம் – வெளிநாட்டவருக்கு அனுமதி உண்டா?

மேல்முறையீடு மறுப்பு

இந்த சூழலில் அண்மையில் அந்த நபருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் பல முறை மேல்முறையீடு செய்த நிலையில் நேற்று அவருடைய மேல்முறையீடு மறுக்கப்பட்டது. அவருடைய உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பிரம்படி அளிக்கப்படவில்லை என்றாலும், 35 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts