டிபிஎஸ் (DBS) வங்கி கணக்குகள் சிலவற்றுள் ஒரே பரிவர்த்தனை இரண்டுமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் நடைபெற்றுள்ளதாக தங்களுக்கு புகார் வந்துள்ளது என்று DBS வங்கி தற்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சில கடன் மற்றும் பற்று அட்டைகளில் அத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு முறைக்கு மேல் பலமுறை இந்த பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிபிஎஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் DBS மற்றும் POSB ஆகிய செயல்களை தங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் சிலர் புகார் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் குறித்து புகார் அளிக்க வங்கியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டபோது வங்கி தொலைபேசிகளும் தொடர்புகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கணக்கில் இருந்து உரிமையாளரின் அனுமதி இல்லாமல் பரிமாற்றம் அடைந்த பணம் விரைவில் அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும் என்று DBS வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 16 1968ம் ஆண்டு அப்போதைய சிங்கப்பூர் அரசால் தொடங்கப்பட்ட வங்கி தான் இந்த DBS. ‘The Development Bank of Singapore Limited’ என்று பெயரில் தொடங்கப்பட்ட இந்த வங்கி கடந்த 2003ம் ஆண்டு DSB என்ற பெயர் மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது.