TamilSaaga

“சிங்கப்பூர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் சீன பொருளியல்” : கருத்தரங்கில் அமைச்சர் கான்

தற்போது சீனாவில் நிலவிவரும் வலுவான பொருளியல் வளர்ச்சி காரணமாக சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு அவற்றினுடைய வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்த நோய் பரவல் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வரும் இந்த நேரத்தில் சீன நாட்டின் பொருளியல் மிகவும் வலுவான நிலையில் மீண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் உள்நாட்டு பயனீட்டை ஊக்குவிக்க சீன அரசு பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் பயனீட்டாளர் செலவினத்தை அதிகரிக்கவும் தற்பொழுது அந்நாடு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீன அரசின் இந்த முடிவு நமது சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை அதிக அளவில் வழங்கக் கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் தான் தெரிவித்தார். சீனா – சிங்கப்பூர் இடையேயான வர்த்தக முதலீடு கருத்தரங்கம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நடந்த நிலையில் தற்போது நான்காவது ஆண்டாக ஷாங்காய் நகரில் ஆறு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தரங்கில் சிங்கப்பூரிலிருந்து Zoom கால் வழியாக அந்த காணொளியின் தொடக்க உரையாற்றிய அமைச்சர் கான் சிங்கப்பூரின் தயாரிப்பு பொருட்கள் பாதுகாப்பு மற்றும் அதிக தரம் மற்றும் நம்பகத்தன்மை பெரிதும் பெற்றவை என்பதை கருத்தரங்கில் சுட்டிக்காட்டினார்.

Related posts