திருச்சி விமான நிலையம் அனுதினமும் மெருகேறி வருகின்றது என்று கூறினால் நிச்சயம் அது மிகையல்ல. திருச்சி விமான நிலையத்தில் வரைவில் புதிய டெர்மினல் திறக்கப்படவுள்ள நிலையில் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல் மற்றும் விமான டிக்கெட் சேவையில் பல வருட அனுபவம் உள்ள திருச்சி நந்தனா ஏர் டிராவெல்ஸ் உரிமையாளர் அளித்த பல பிரத்தியேக தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
வெளியான புதிய தகவலின்படி திருச்சி to சிங்கப்பூர், துபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு வாரத்தின் 7 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை நேரடியாக இயக்கவுள்ளது.
திருச்சி to அபுதாபிக்கு அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை நேரடியாக இயக்கவுள்ளது.
திருச்சி to தோஹாவிற்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை நேரடியாக இயக்கவுள்ளது.
திருச்சி to குவைத்திற்கு அனைத்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை நேரடியாக இயக்கவுள்ளது.
திருச்சி to மஸ்கட்டிற்கு அனைத்து வியாழக்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை நேரடியாக இயக்கவுள்ளது.
மேலும் சில Exclusive தகவல்கள்
தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் சிங்கப்பூர், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு மட்டுமே திருச்சியில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நிலைமை சீராகியுள்ள இந்த நேரத்தில் மேலும் 5 நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
அதே போல சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கும் திருச்சியில் இருந்து நேரடி விமானங்களை என்று அங்குள்ள தமிழ் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
Content Source : Nandhana Air Travels Trichy
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
97 91 477 360