TamilSaaga

Exclusive : வெளிநாட்டில் வேலை செஞ்சா, கல்யாணத்துக்கு பெண் கிடைப்பதில் சிரமம்? – ஒரு சுவாரஸ்ய பதிவு

வெளிநாட்டில் வேலை என்பது இன்றளவும் பல நாட்டு இளைஞர்களின் கனவாகவே உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதிலும் நமது சிங்கப்பூரில் வேலை கிடைக்கிறது என்றால் பல நாட்டு இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். காரணம் அதிக சம்பளமும் அதே சமயம் Hi-Tech வாழ்வியல் முறையும் தான் என்றால் அது மிகையல்ல.

நல்ல சம்பளம், சிறந்த வாழ்க்கை முறை என்று பல ருசிகரமான விஷயங்களை உள்ளடக்கிய இந்த வெளிநாட்டு வேளையிலும் சில சிக்கல்கள் ஒளிந்திருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?. ஆம் ஆயிரக்கணக்காக வெள்ளிகள் சம்பளம் வாங்கினாலும், அந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் சில சிக்கல்களை சந்திக்கின்றனர், அந்த சிக்கல் தான் கல்யாணம். அதிலும் குறிப்பாக இந்த 90s கிட்ஸ் இந்த விஷயத்தில் மிகுந்த பல வேதனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“மாப்பிளை வெளிநாட்டில் இருக்காரா?.. அட எங்களுக்கு அது போதும்” என்று நினைக்கும் பெண் வீட்டார் இருக்கும் அதே நேரத்தில், சிலர் வெளிநாட்டு மாப்பிளைக்கு தங்கள் பெண்களை மணமுடித்து தர மறுக்கின்றனர். தங்கள் பெண்களின் மீது கொண்ட அதீத பாசத்தால் சிலர் அவர்களை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடித்து தர யோசிக்கின்றனர். அறிமுகம் இல்லாத நாட்டில் 1000கணக்கான மயில்களுக்கு அப்பால் நமது பெண் நம் துணையின்றி என்ன செய்வாள் என்று அஞ்சுகின்றனர்.

ஆனால், முன்பெல்லாம் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை இருக்கிறார் என்றால், அதே நாட்டில் வேலை செய்யும் இன்னொருவரை கொண்டு தான் அந்த மாப்பிளையை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. வெளிநாட்டில் இருப்பவரை இங்கிருந்தே தொடர்புகொண்டு வீடியோ காலில் பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. Whatsapp, Facebook, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள லட்சம் வழிகள் வந்துவிட்டது.

ஆகையால் பெண்கள் பலரும் தற்போது வெளிநாட்டு மாப்பிள்ளைகளையே அதிகம் விரும்புவதாகவும் சிலர் கூறுகின்றனர். எதுஎப்படி இருந்தாலும் இன்றளவும் வெகு சிலர் தங்கள் பெண் மீது கொண்ட பாசத்தினால் வெளிநாட்டில் பணிபுரியும் ஆண்களுக்கு தங்கள் பெண்களை மணம்முடித்து தர சற்று கலக்கப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Related posts